• Sep 20 2024

சிவகார்த்திகேயனின் வீக் பாய்ட் என்றால் கண்டிப்பாக இதுதான்- உண்மையை உடைத்த நடிகை ப்ரியங்கா மோகன்

stella / 10 months ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் குறுகிய காலத்திலேயே  முன்னணி நடிகராக வளர்ந்து நிற்பவர் தான் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான மாவீரன் படமும் இவருக்கு வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. இதனை அடுத்து இவரது நடிப்பில் வெளியாகிய அயலான் திரைப்படமும் விரைவில் வெளியாகவுள்ளது.

டாக்டர் மற்றும் டான் படங்களில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்தவர் தான் ப்ரியங்கா மோகன்.. தமிழில் சிறப்பான வரவான இவர், அடுத்தடுத்து தென்னிந்திய மொழிப் படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். இதனிடையே அவர் தனது சமீபத்திய பேட்டியில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த தன்னுடைய அனுபவத்தை பகிர்ந்துள்ளார். 


மேலும் சிவகார்த்திகேயனின் வீக்னஸ் குறித்தும் அவர் பேசியுள்ளார். சிவகார்த்திகேயனுக்கு இனிப்புகள் என்றால் அவ்வளவு பிடிக்குமாம். அவர் அதற்கு அடிமையாகிவிட்டதாகவும் சூட்டிங் ஸ்பாட்டிலும் எப்போதும் இனிப்புகளை சாப்பிட்டுக் கொண்டே இருப்பார் என்றும் ப்ரியங்கா கூறியுள்ளார். 

அவர் சாப்பிடுவது மட்டுமில்லாமல் உடன் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கும் இனிப்புகளை கொடுத்து சாப்பிட சொல்லி வற்புறுத்துவார் என்றும் தெரிவித்துள்ளார்.தன்னையும் பல முறை இனிப்புகளை சாப்பிட சொல்லி சிவகார்த்திகேயன் வற்புறுத்தியதாகவும் ப்ரியங்கா மோகன் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.


 முன்னதாக தனக்கு இனிப்புகள் என்றால் மிகவும் பிடிக்கும் என்று சிவகார்த்திகேயனும் தன்னுடைய பேட்டிகளில் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது. நடிகர்கள் தங்களது உடலை பிட்டாக வைத்துக் கொள்ள இனிப்புகளை தவிர்ப்பது வழக்கமாக உள்ள நிலையில், அதுகுறித்தெல்லாம் கவலை கொள்ளாமல் சிவகார்த்திகேயன் அதிகமான இனிப்புகளை எடுத்துக் கொள்வது ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளது.


Advertisement

Advertisement