தமிழ் சினிமாவில் உள்ள முன்னணி நடிகர்களில் முக்கியமானவர் தான் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் இறுதியாக வெளியாகிய டான் மற்றும் டாக்டர் ஆகிய திரைப்படங்கள் சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதால் இவருடைய படங்களுக்கான எதிர்பார்ப்பானது அதிகரித்துள்ளது.
டான் மற்றும் டாக்டர் ஆகிய திரைப்படங்கள் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது. மேலும் அப்படங்களை தொடர்ந்து சிவகார்த்திகேயன் ப்ரின்ஸ் திரைப்படத்தில் நடித்து வந்தார். பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள அப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது.
இந்த நிலையில் சமீபத்தில் மாவீரன் திரைப்படம் குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகி தற்போது ஷூட்டிங் நடைபெற்று வருகிறது. இதில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை அதிதி ஷங்கர் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக யார் நடிப்பது என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதாவது விஜய் டிவி-ன் KPY நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானவர் தான் மோனிசா இவர் மாவீரன் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கை கதாபாத்திரத்தில் நடிப்பதாக தகவல் பரவி வருகிறது.
பிற செய்திகள்
- குடும்பத்தை கஷ்டப்படுத்தி வருகின்ற காசை என்ன செய்யப் போறீங்க- பயில்வானையே பங்கம் பண்ணின கலா மாஸ்டர்
- இரண்டாவது முறையாக புதிய மாடல் காரை வாங்கிய ஜிபி முத்து – அடடே இது இத்தனை கோடி பெறுமதியானதா?
- ஈரமான ரோஜாவே சீசன்2 சீரியல் கதாநாயகி ப்ரியாவை சல்வாரில் பார்த்திருக்கின்றீர்களா?- வேற லெவல் கிளிக்ஸ்
- பெரிய ரம்பா தொட போவியா- பிரபல காமெடியன் சொன்ன ஜோக்கால் விழுந்து விழுந்து சிரித்த மறைந்த நடிகர் விவேக்
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!