'ஜப்பான்' திரைப்பட இசை வெளியீட்டு விழாவிற்கு பல பிரபலங்கள் வந்திருந்த நிலையில், அமீருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை என்ற சர்ச்சை தற்போது கிளம்பியுள்ளது.
இதைத்தொடர்ந்து அமீர் அளித்த பேட்டி ஒன்றில், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தான் சிவகுமார் குடும்பத்திற்கும் எனக்கும் இருந்த உறவை கெடுத்து விட்டார். பருத்திவீரன் படத்தால் தனக்கு ஏகப்பட்ட நஷ்டம் என்றும் கூறியிருந்தார்.
இவ்வாறான நிலையில், ஞானவேல் ராஜா அமீரை பற்றிய பல விஷயங்களை தெரிவித்துள்ளார். அதிலும் 15 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பிரச்சனையை அவர் வெட்ட வெளிச்சமாக்கி இருப்பது இந்த பிரச்சனையை இன்னும் சூடு பிடிக்க வைத்துள்ளது.
அதனபடி அவர் கூறியிருப்பதாவது, 'அமீர் தன்னுடைய கடன் பிரச்சனையை தீர்க்க தான் பருத்திவீரனை இயக்க முன்வந்தார். அதிலும் இரண்டு கோடியில் படத்தை முடிப்பதாக கூறிவிட்டு 4 கோடி வரை இழுத்து விட்டார். அந்த பணத்தில் நான்கு படங்களை எடுத்து இருக்கலாம். இதில் ஒரு காட்சியில் வெறும் 15 பன்றிகளை மட்டும் நடிக்க வைத்துவிட்டு 200 என கணக்கு காட்டினார். இதேபோன்று வேறு சில தயாரிப்பாளர்களும் அவரால் பாதிக்கப்பட்டனர். நாங்கள் ஒன்று சேர்ந்து பேட்டி கொடுக்க தயார்' என்று சவால் விடும் வகையில் பேசியுள்ளார்.
ஆக மொத்தம் இவர்கள் இருவரும் மாறி மாறி குற்றம் சாட்டி வருவது ஒரு குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனாலும் 15 வருட பகையை ஞானவேல் ராஜா தற்போது கிளறி இருப்பது சந்தேகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. வாடிவாசல் படத்தில் சூர்யாவுடன் இணைந்து நடிக்க அமீர் சம்மதித்திருப்பது தான் இதற்கு காரணமா என்றும் பேசப்பட்டு வருகிறது.
Listen News!