• Sep 20 2024

ஐயையோ... கதிர் பார்த்தால் கதை என்னாகும்..? வெளியான வீடியோவால் 'எதிர்நீச்சல்' நந்தினியை வச்சு செய்யும் ரசிகர்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

சன் டிவியில் செம ஹிட்டாக ‘எதிர்நீச்சல்’ என்னும் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. டி.ஆர்.பி ரேட்டிங்கிலும் இந்த சீரியலானது தொடர்ந்து முன்னணி வகித்து வருகின்றது. அந்த அளவிற்கு மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளது. 


பெண் அடிமைத்தனம், ஆணாதிக்கம் தொடர்பான கருத்துகளை பேசி வருவதால் நாளுக்கு நாள் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் அதிகமாகிக் கொண்டு வருகின்றனர். இதில் குணசேகரன், ஆதிரை, கரிகாலன், நந்தினி, ஜனனி, ஜான்சிராணி என ஒவ்வொருவரும் தங்களது நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தி வருகின்றனர்.


அதிலும் குறிப்பாக ஆதிரை அருண் என்பவரைக் காதலித்து வந்த நிலையில் இறுதியில் தன்னை ஒரு தலையாக காதலித்த கரிகாலனை கட்டாயக் கல்யாணம் பண்ணி இருக்கின்றார். அதேபோன்று நந்தினி கதிரைக் கல்யாணம் பண்ணி இருப்பினும் இவரது வாழ்க்கையில் சந்தோஷமில்லை. எது எவ்வாறாயினும் இந்த சீரியலில் நடிக்கும் அனைவரும் எதோ ஒரு வகையில் ரசிகர்களைக் கவர்ந்திருக்கின்றனர். 


இந்நிலையில் தற்போது இந்த சீரியலில் ஆதிரையாக நடிக்கும் சத்தியாவும், நந்தினியாக நடிக்கும் ஹரிப்ரியாவும் இணைந்து காதல் பாட்டு ஒன்றிற்கு க்யூட்டாக  டான்ஸ் ஆடி வீடியோ வெளியிட்டிருக்கின்றனர். இதனைப் பார்த்த ரசிகர்கள் "கதிர் பார்த்தால் நந்தினியோட கதை சரி" எனக் கமெண்டுகளின் வாயிலாக கலாய்த்து வருகின்றனர்.


Advertisement

Advertisement