• Sep 20 2024

பிரபல நடிகரின் முன்னிலையில் விஜய் டிவியை கலாய்த்த சிவாங்கி!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலமாக தமிழ் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தவர் சிவாங்கி.பாடகி பின்னி கிருஷ்ணகுமாரின் மகளான சிவாங்கி சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில்தான் முதலில் கலந்துக்கொண்டார் என்றாலும் , இவருக்கு அதிக அளவிலான பிரபலத்தை ஏற்படுத்திக்கொடுத்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சிதான்.

மேலும் அந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களை நிறைவடைந்ததை அடுத்து தற்போது மூன்றாவது சீசனும் ஒளிபரப்பாகி வருகின்றது.அதிலும் சிவாங்கி கோமாளியாக அசத்தி வருகிறார்.

அது மட்டுமலாமல் ஆல்பம் பாடல்கள் பாடுவது, திரைப்படங்களில் நடிப்பது , சினிமாவில் பாடல்கள் பாடுவது என படுபிஸியாக இருக்கிறார் சிவாங்கி.தற்போது கூட சிவகார்த்திகேயனின் டான் படத்தில் நடித்துள்ளார்.

இவ்வாறு இருக்கையில் நேற்று ஒளிபரப்பான எபிசோடில் நடிகர் சிவகார்த்திகேயன் டான் பட ப்ரோமோஷனுக்காக குக் வித் டகோமாளி செட்டுக்கு வந்து இருந்தார். மேலும் அவர் வந்ததும் குக் மற்றும் கோமாளி என எல்லாருமே குதூகலம் ஆனார்கள்.

"நான் இந்த சீசனையும் பார்த்து வருகிறேன். பலரும் எனக்கு தெரிந்தவர்கள் தான். தெரியாதவர்களும் நிகழ்ச்சிக்கு பார்க்கும்போது எனக்கு பிடிக்கிறது."

"கடந்த முறை நான் இங்கே வந்த போது அதிக நேரம் இருக்க முடியவில்லை. அதனால் இந்த முறை அதிகம் நேரம் இருக்கும் வகையில் வந்திருக்கிறேன். நிகழ்ச்சி லைவ்வில் பார்க்க அதிகம் ஆர்வமாக இருக்கிறேன்" என சிவகார்த்திகேயன் தெரிவித்தார்.

"நேரில் பார்த்தால் அப்படி இருக்காதே.. எல்லாமே எடிட்டிங்" என சிவாங்கி கூறி விஜய் டிவியையே கலாய்த்து விட்டார்.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement