• Sep 20 2024

சீறிப் பாயும் சீயான் விக்ரம்... 'தங்கலான்' படத்தின் அனல் பறக்கும் மேக்கிங் வீடியோ..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன் படத்தினைத் தொடர்ந்து தற்போது சீயான் விக்ரம் நடிப்பில் 'தங்கலான்' படம் உருவாகியுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தை பா.ரஞ்சித் இயக்குகின்றார்.


இப்படத்தில் விக்ரமுடன் இணைந்து நடிகைகள் பார்வதி, மாளவிகா மோகனன் ஆகியோரும், நடிகர்கள் பசுபதி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். அத்தோடு இந்த படத்துக்கு ஜி.வி.பிரகாஷ்குமார் பிரமாண்டமாக இசையமைக்கிறார்.


இந்நிலையில் விக்ரம் இன்று தனது 57வது பிறந்தநாளை கோலாகலமாக கொண்டாடுகிறார். இதனை சிறப்பிக்கும் வகையில்  படக்குழு நேற்றைய தினம் போஸ்டர் ஒன்றை வெளியிட்டது. இதனையடுத்து இன்று காலை மற்றுமோர் புதிய அப்டேட் வெளியானது. 


அந்தவகையில் தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோ வெளியாகியுள்ளது. இதில் ஷூட்டிங் ஸ்பாட்டில் விக்ரம் காட்சிக்கு தயாராவது, பா.ரஞ்சித் காட்சியை விளக்குவது, செட் போடும் பணிகள் உள்ளிட்ட பல இடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement