• Sep 20 2024

எஸ்.ஜே சூர்யாவின் பிறந்தநாளில் மார்க் ஆண்டனி படக்குழு வெளியிட்ட வித்தியாசமான போஸ்டர்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஷால் தற்பொழுது தனது 33வது படத்தில் நடித்து வருகின்றார்.இப்படத்தினை இயக்குநர் ஆதிக் கேசவன் இயக்கியுள்ளதோடு விஷாலுக்கு ஜோடியாக ரித்து வர்மா நடிக்கிறார் .மிக முக்கிய வேடத்தில் எஸ்.ஜே சூர்யாவும் சுனில் வர்மா ,நிழல்கள் ரவி ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்திற்கு ஜு.வி பிரகாஷ் இசையமைப்பதோடு தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி என 5 மொழிகளில் பான் இந்தியா படமாக இப்படம் வெளியாக உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் சில நாட்களுக்கு முன் சென்னையில் தொடங்கியது.

இப்போது இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படத்துக்காக பூந்தமல்லி சுந்தர் ஸ்டுடியோவில் பிரம்மாண்டமாக ஒரு செட் அமைக்கப்பட்டு அதில் ஒரு பாடல்காட்சி படமாக்கப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது.

அந்த செட்டில் விஷால் மற்றும் எஸ் ஜே சூர்யா இருவரும் இணைந்து ஒரு குத்து பாடலுக்கு நடனமாடியுள்ளதாகவும் சொல்ப்படுகிறது. இந்த பாடலுக்கு தினேஷ் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் இன்று நடிகர் S.J. சூர்யாவின் 54வது பிறந்தநாளை முன்னிட்டு மார்க் ஆண்டனி படக்குழு புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது. நியூ & அன்பே ஆருயிரே படங்களை நினைவூட்டும் விதத்தில் நியூ படத்தின் ஸ்டில்லை இணைத்து இந்த போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement