• Sep 20 2024

எஸ்ஜே சூர்யா இல்லாத படமே இல்லை போல.. வெற்றிமாறன் அடுத்த படத்தில் கேமியோ..!

Sivalingam / 4 months ago

Advertisement

Listen News!

நடிகர் எஸ்ஜே சூர்யா பல படங்களில் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் அவர் நடிக்காத படமே இல்லை என்ற அளவுக்கு வாய்ப்புகள் குவிந்து கொண்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. அந்த வகையில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ’விடுதலை 2’ படத்திலும் சிறப்பு தோற்றத்தில் எஸ்ஜே சூர்யா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

நடிகர் மற்றும் இயக்குனர் எஸ்ஜே சூர்யா கடந்த சில ஆண்டுகளாகவே நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார் என்பதும் அவரது நடிப்பில் உருவான ’மார்க் ஆண்டனி’ ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவரை தங்கள் படங்களில் ஒப்பந்தம் செய்ய பல முன்னணி ஹீரோக்களை முன்வந்து கொண்டிருக்கிறார்கள் என்று தகவல்கள் வெளியாகி கொண்டிருக்கின்றன.

அந்த வகையில் எஸ்ஜே சூர்யா தற்போது ’இந்தியன் 2’ ’கேம் சேஞ்சர்’ ’ராயன்’ ’எல்ஐசி’ ’வீரதீரசூரன்’ உள்பட ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ’விடுதலை 2’ படத்திலும் சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.

ஏற்கனவே இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிப்பதாக தான் விஜய் சேதுபதி அறிவிக்கப்பட்டிருந்தார் என்பதும் அதன் பிறகு அவர் கிட்டத்தட்ட ஆன்ட்டி ஹீரோ வேடத்தில் அந்த படத்தில் நடித்து வருவதாக கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது எஸ்ஜே சூர்யா சிறப்பு தோற்றத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது கேரக்டரும் நீடிக்கப்படுமா? அவரது கேரக்டருக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு காட்சிகளும் அதிகரிக்கப்படுமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்த நிலையில் ’விடுதலை 2’ படத்தை இந்த ஆண்டுக்குள் ரிலீஸ் செய்ய வேண்டும் என்று வெற்றிமாறன் தீவிர முயற்சி எடுத்து வருவதாகவும் இன்னும் 20 நாட்கள் படப்பிடிப்பு இருப்பதாகவும் அதனை அடுத்து தொழில்நுட்ப பணிகளை ஆரம்பித்து படத்தை முடிக்க அவர் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement