• Sep 20 2024

“கடமையை செய் பலனை எதிர்பாராதே”எஸ்.ஜே சூர்யா திரைப்படத்தின் ரிலீஸ் திகதி அறிவிப்பு

stella / 2 years ago

Advertisement

Listen News!

குஷி, வாலி போன்ற படங்களை இயக்கிய எஸ்.ஜே சூர்யா ஹூலிவூட் இல் புகழ்பெற்ற இயக்குநர் ஆவார். திரைப்பட இயக்குநராக அறிமுகமாகி பின்னர் அன்பே ஆருயிரே, கள்வனின் காதலி, வியாபாரம் போன்ற படங்களில் நடிகராகி காலப்போக்கில் வில்லனாக கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.

மாநாடு, டான் போன்ற படங்களில் வில்லனாக நடித்து மாஸ் ஹிட் கொடுத்தார்.எந்த கதாபாத்திரத்தையும் ஏற்கும் இயல்பை கொண்டவர். இந்நிலையில் நடிகர் எஸ்.ஜே சூர்யா நடித்த கடமையை செய் பலனை எதிப்பார்க்காதே என்ற திரைப்படத்தின் திகதியை படக்குழு அறிவித்துள்ளது.

இப்படத்தை வெங்கட் ராகவன் இயக்கியுள்ளார். எஸ்.ஜே சூர்யாக்கு ஜோடியாக பிக் பாஸ் யாஷிகா ஜோடியாக நடிக்கின்றார். மேலும் மொட்டை இராஜேந்திரன்,சேஸு , வின்செட் அசோகன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் ட்ரைலெர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இந்த ஜூன் 24 அன்று திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

பிற செய்திகள்:

  • சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement