தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக விளங்கும் கமல்ஹாசன் நடிப்பில் இந்தியன் 2 திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ளது. இதனை அடுத்து மணிரத்னம் இயக்கும் தக் லைஃப் என்னும் படத்திலும் ஹெச் வினோத் இயக்கும் புதிய படத்திலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
இது தவிர தயாரிப்பு பணியிலும் தீவிரமாக களமிறங்கியுள்ளார். அதன்படி இயக்குனர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்பு நடிக்கும் எஸ்.டி.ஆர் படத்தை தயாரித்து வருகின்றார்.வரலாற்று கதையம்சம் கொண்ட பிரமாண்ட படமாக உருவாகி வரும் இப்படமானது சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் தயாரிக்க திட்டமிட்டுள்ளாராம் கமல்ஹாசன்
இதேபோல் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் எஸ்.கே.21 படத்தையும் கமல்ஹாசன் தான் தயாரித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது. இப்படத்தில் சிவகார்த்திகேயன் ராணுவ வீரராக நடித்துள்ளதால் இதன் பெரும்பாலான படப்பிடிப்பு காஷ்மீரில் தான் நடைபெற்றது.
இதனால் இப்படத்தின் பட்ஜெட் அதிகரித்து விட்டதாகவும், திட்டமிட்டதைவிட ரூ.25 கோடி அதிகமாகிவிட்டதால் என்ன செய்வதென்று தெரியாமல் திக்குமுக்காடிப் போய் உள்ளாராம் கமல்ஹாசன். இதனை ராஜ்கமல் நிறுவனத்துடன் சேர்ந்து தயாரித்துள்ள சோனி நிறுவனம் இந்த பட்ஜெட் அதிகமானதுக்கு தாங்கள் பொறுப்பாக முடியாது என கைவிரித்துவிட்டதால் கமல்ஹாசன் அப்செட் ஆகி உள்ளாராம். இந்த விஷயத்தில் சிவகார்த்திகேயனின் சம்பளத்திலும் கைவைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக வலைப்பேச்சு அந்தணன் கூறி இருக்கிறார்.
Listen News!