• Sep 21 2024

தல, தளபதியின் வசூலை முறியடித்த நம்ம வீட்டு பிள்ளை எஸ்.கே

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

மெரினா திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமாகி தன்னுடைய திரைப்பயணத்தை தொடங்கியவர் நம்ம வீட்டு பிள்ளை சிவகார்த்திகேயன்.இன்று தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம்வருகின்றார்.

அந்தவகையில் அறிமுக இயக்குநர் சிபி சக்கரவர்த்தியின் இயக்கத்தில் வெளியான திரைப்படம் டான்.கடந்த 13ஆம் திகதி வெளியாகியது. சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடித்திருந்தார்.சமுத்திரகனி, எஸ்.ஜே சூர்யா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

படம் வெளியாகி 18 நாட்கள் ஆகியும் இன்று வரை திரையரங்குகளில் நல்ல வரவேற்பையும்,நல்ல வசூலை பெற்று வருகின்றது.தற்போது என்ன தகவல் என்றால் திருச்சியில் படத்திற்கு நல்ல வரவேற்பு என கூறப்படுகிறது.

அதாவது நம்ம தளபதி நடிப்பில் வெளிவந்த பீஸ்ட் பட வசூல் மற்றும் அஜித்தின் வலிமை படம் என்பவற்றின் வசூலை நம்ம எஸ்.கே. இன் டான் முறியடித்துள்ளதாம்.

டான் வெளியாகி 18 நாட்களில் ரூ. 2.64 கோடி வரை வசூலித்துள்ளது.இது வலிமை மற்றும் பீஸ்ட் பட வசூலை விட அதிகம் என்கின்றனர்.

Advertisement

Advertisement