விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தற்போது நாளுக்கு நாள் மேலும் சூடு பிடிக்கின்றது. அதிலும் சனி, ஞாயிறு கமல் தொகுத்து வழங்கும் காட்சியை பார்ப்பதற்கென தனி ரசிகர் கூட்டமே காத்திருக்கும்.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என பிராந்திய மொழிகளிலும் பிக்பாஸ் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது.
இதில் கலந்து கொண்ட பிரபலங்களுக்கு பிரபலத்தோடு சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பும் கிடைப்பதால், சினிமாவில் நடிக்க விரும்பும் நடிகர்கள் இந்த நிகழ்ச்சியில் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர்.
இவ்வாறான நிலையில், இன்றைய நாளுக்கான ப்ரோமோ வெளியாகியுள்ளது.
அதன்படி, 'பிக்பாஸ் வீட்டில் இந்த வாரம் புக்தியை வச்சி விளையாடினாங்க, சக்தியை வச்சி விளையாடினாங்க.. ஆனா இது யாருக்கு சாதகமாக அமைய போகுது, யாருக்கு பாதகமாக அமையப்போகுது என இன்றிரவு பொறுத்திருந்து பார்ப்போம்' என கமல் கூறிச்செல்கிறார். நாமும் பொறுத்திருந்து பார்ப்போம்.
Listen News!