• Nov 14 2024

விதவிதமான உடையணிந்து... குடும்பத்துடன் இணைந்து புத்தாண்டு கொண்டாடிய சினேகா... க்யூட்டான புகைப்படங்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாத் திரையுலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை சினேகா. மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான இவர் 'என்னவளே' படத்தின் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தார். அதுமட்டுமல்லாது தனது அழகான சிரிப்பால் தமிழக ரசிகர்களை வளைத்துப்போட்டு புன்னகை அரசி எனவும் பெயர் எடுத்தார்.


மேலும் 2009 ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் சினேகா இருவரும் 'அச்சமுண்டு அச்சமுண்டு' என்ற திரைப்படத்தில் ஜோடியாக இணைந்து நடித்தனர். அப்போது இவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பின்னாளில் அந்த நட்பு காதலாக மாறியது.


இதனைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். அந்தவகையில் தற்போது இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.


இந்நிலையில் சமீபகாலமாக சமூகவலைத்தளங்களில் சினேகா-பிரசன்னா இருவரும் பிரியப் போவதாக ஒரு வதந்தி பரவிய வண்ணமே இருந்தன. அதாவது 10 வருட திருமண வாழ்க்கையை விவாகரத்து மூலம் பிரிந்து விட்டதாக சினேகா - பிரசன்னா முடிவெடுத்துள்ளதாகவும் அந்த செய்திகள் பரவி இருந்தன.


குறிப்பிட்ட சில தொலைக்காட்சி சேனல்களிலும் இந்த செய்தி படு வைரலாக இதற்கு பதிலடி கொடுக்கும் படி சினேகா கணவர் பிரசன்னாவுடன் நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை சமீபகாலமாக வெளியிட்டு முற்றுப்புள்ளி வைத்த வண்ணமே இருக்கின்றார். 


அந்தவகையில் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நேற்றைய தினமும் விதவிதமான உடையணிந்து தனது குடும்பத்துடன் இணைந்து கொண்டாடி அதனைப் புகைப்படமாக எடுத்து வெளியிட்டிருக்கின்றார். அப்புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement