• Sep 21 2024

சூப்பர் செய்தி கூறிய நடிகர் பிரசன்னா-குஷியில் சினேகா ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் சுசி கணேசன் இயக்கத்தில் 2002ம் ஆண்டு வெளியான ஃபைவ் ஸ்டார் படம் மூலம் அறிமுகமாகியவர் தான் நடிகர் பிரசன்னா.

இதனைத் தொடர்ந்து அழகிய தீயே, கண்ட நாள் முதல், சாது மிரண்டால், அஞ்சாதே, நாணயம், முரண், சென்னையில் ஒரு நாள், பா பண்டி, திருட்டுப்பயலே 2 உள்ளிட்ட ஏகப்பட்ட படங்களில் நடித்திருக்கின்றார்.

இருப்பினும் சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்த இவர் குணச்சித்திர வேடங்களிலும் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் நடித்து வருகின்றார்.

அந்த வகையில் துப்பறிவாளன் என்னும் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். அதே போல சமீபத்தில் வெளியான ஃபிங்கர்டிப் வெப்சீரிஸில் சிறப்பாக நடித்து அசத்தியிருந்தார்.

எப்போது இன்ஸ்டா பக்கத்தில் தனது குடும்ப புகைப்படங்களையும் டுவிட்டரில் தனக்கு தோன்றிய விஷயங்களையும், மற்றவர்களின் நல்ல விஷயத்திற்கு பாராட்டுவதும் என இருப்பார்.

இவ்வாறு இருக்கையில் இப்போது டுவிட்டரில் அவர் சூப்பர் செய்தி ஒன்று வெளியிட்டுள்ளார். அதாவது பிரசன்னாவிற்கு மும்பையில் ஜொலிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளதாம், அதாவது ஹிந்தி படத்தில் நடிக்க இருக்கிறாராம்.ஆனால் யாருடைய படம், என்ன படம் என்ற விவரங்கள் தெரியவில்லை.

இவ்வாறு இருக்கையில் நடிகர் பிரசன்னா அளித்த டுவிட்டிற்கு சினேகா ரசிகர்களும் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement