• Nov 19 2024

முதன் முறையாக டேட்டிங் சென்ற சினேகா- பிரசன்னா ஜோடி-வைரலாகும் புகைப்படம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் இருந்துள்ளனர். அவர்கள் வரிசையில் மிக முக்கியமான நடிகை தான் சினேகா.இவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதோடு புன்னகை அரசி என்றும் மக்களால் அழைக்கப்பட்டு வருகின்றார்.

நடிகை சினேகா கடந்த 2012 ம் ஆண்டு நடிகர் பிரசன்னா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் விஹான் என்ற மகனும் ஆத்யந்தா என்னும் பெண் குழந்தையும் உள்ளது.

திருமணத்திற்கு பின்னர் சில படங்களை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றார். அப்படி இவர் நடிப்பில் கடைசியாக பட்டாஸ் திரைப்படம் வெளிவந்தது.

சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்டிவாக இருந்து வரும் இந்த ஜோடி அவ்வப்போது தங்கள் குடும்ப புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றனர். மேலும் அவருக்கு அதிக அளவில் லைக்குகளும் குவிந்து வருகிறது.

இந்நிலையில் தற்போது தாங்கள் காதலிக்கும்போது முதல்முறையாக டேட்டிங் சென்ற புகைப்படத்தை இன்ஸ்டாவில் வெளியிட்டு உள்ளனர். அதற்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

பிறசெய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement