• Nov 19 2024

சினேகா-பிரசன்னாவா இது.. திருமணத்திற்கு முன்னர் இப்படியா இருந்தாங்க..? வைரலாகும் புகைப்படம்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் விஜய், கமல், அஜித், தனுஷ் எனப் பல முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக பல படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சினேகா. குறிப்பாக இவர் நடிப்பில் வெளியான 'ஆனந்தம், பம்மல் கே சம்பந்தம், வசீகரா, புதுப்பேட்டை, ஆட்டோகிராப், பள்ளிக்கூடம், பவானி' போன்ற படங்களை இன்றும் நம்மால் மறக்க முடியாது.


இவ்வாறு பல படங்களிலும் நடித்து வந்த சினேகா, பிரசன்னாவுக்கு ஜோடியாக 'அச்சமுண்டு அச்சமுண்டு' என்ற படத்தில் நடித்த போது இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட நட்பு.. பின்னர் அது காதலாக மாறியது. சில வருடங்கள் தங்களுடைய காதலை வெளியே சொல்லாமல் இருந்து வந்த இந்த ஜோடி பின்னர் கடந்த 2012 ஆம் ஆண்டு தங்களது பெற்றோர் சம்பந்தத்துடன், மிகப் பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர்.


அன்று தொட்டு இன்றுவரை தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடியாக வலம் வருகின்றனர். அதுமட்டுமல்லாது குணச்சித்திர வேடங்களில் இருவருமே தற்போது நடித்து வருகிறார்கள். மேலும் சினேகா மற்றும் பிரசன்னாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக, இருவரும் விவாகரத்து முடிவை கையில் எடுத்துள்ளதாக சில வெளியாகி இருந்தன.


இதனைத் தொடர்ந்து இவர்கள் குறித்த பல அன்ஸீன் புகைப்படங்கள் வெளியாகிய வண்ணம் தான் இருக்கின்றன. அந்தவகையில் தற்போதும் அவர்கள் இருவரும் திருமணத்திற்கு முன் எடுத்த புகைப்படம் ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. இதோ அந்தப் புகைப்படம்..!


Advertisement

Advertisement