• Sep 20 2024

சினேகா-பிரசன்னா வீட்டில் இன்று இடம்பெறவுள்ள விசேஷம்... குவியும் வாழ்த்துக்கள்..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமான சினேகா 'என்னவளே' படத்தின் மூலம் தமிழுக்கு என்ட்ரி கொடுத்தார். அதுமட்டுமல்லாது தனது அழகான சிரிப்பால் தமிழக ரசிகர்களை வளைத்துப்போட்டு புன்னகை அரசி எனவும் பெயர் எடுத்தார்.


இவர் 2009 ஆம் ஆண்டு பிரசன்னா மற்றும் சினேகா இருவரும் 'அச்சமுண்டு அச்சமுண்டு' என்ற திரைப்படத்தில் ஜோடியாக இணைந்து நடித்தனர். அப்போது இவர்கள் இருவருக்கும் நட்பு ஏற்பட்டு பின்னாளில் அந்த நட்பு காதலாக மாறியது. இதனைத் தொடர்ந்து 2011-ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் பெற்றோரின் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர். அந்தவகையில் தற்போது இந்தத் தம்பதிக்கு ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள்.


இந்நிலையில் இன்றைய தினம் இவர்களது மகன் விகானின் பிறந்த தினமாகும். இவரிற்கு வாழ்த்துக் கூறும் வகையில் பிரசன்னா தனது இன்ஸ்டா பக்கத்தில் தற்போது அழகிய வீடியோ ஒன்றினைப் பகிர்ந்து இருக்கின்றார். இதனைப் பார்த்த பிரபலங்கள், மற்றும் ரசிகர்கள் உட்படப் பலரும் தங்களது வாழ்த்துக்களை விகானிற்கு தெரிவித்து வருகின்றார்.


Advertisement

Advertisement