தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் புன்னகை அரசி என்ற பட்டத்தோடு முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் சினேகா. இவர் தமிழில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்திருக்கின்றார்.
அத்தோடு நடிகர் பிரசன்னாவைத் திருமணம் செய்த இவருக்கு இரண்டு பிள்ளைகளும் உள்ளனர். திருமணத்திற்குப் பிறகு சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்த இவர் தற்பொழுது மீண்டும் நடிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றார்.
மேலும் இரண்டாவது குழந்தை பிறந்த பிறகு சற்று குண்டாக இருந்ததால் போட்டோக்கள், வீடியோ எதுவுமே வெளியிடாமல் இருந்தார். அதை பிரசன்னாவே இன்ஸ்டா லைவ்வில் கூறி இருந்தார்.
அதற்கு பிறகு உடல் எடையை அதிகம் குறைக்க சினேகா அதிகம் ஒர்கவுட் செய்து தற்போது ஸ்லிம் ஆக மாறி இருக்கிறார்.தற்போது அவர் ட்ரெண்டியான உடையில் போஸ் கொடுத்து இன்ஸ்டாகிராமில் சில புகைப்படங்கள் வெளியிட்டு இருக்கிறார். அவை ரசிகர்களை கவர்ந்து வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!