தமிழ் சினிமாவில் பன்னீர் நதிகள், உயிரே உனக்காக, லட்சுமி வந்தாச்சு உள்ளிட்ட படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து அறிமுகமாகியவர் தான் மீனா.இதனை அடுத்து கதாநாயகியாக என் ராசாவின் மனசிலே என்னும் படத்தில் நடித்திருந்தார்.
இப்படத்தில் ராஜ்கிரனுக்கு ஜோடியாக சோலையம்மா கதாபாத்திரத்தில் நடித்து பலத்த பாராட்டுகளைப் பெற்றார் மீனா.பின்னர் ரஜினிகாந்த், சத்யராஜ், விஜயகாந்த், கமலஹாசன், சரத்குமார், பிரபு என அன்றைய டாப் டென் நாயகர்களுக்கு ஜோடியாக நடித்து வந்தார்.
கண்ணழகி என்று அழைக்கப்படும் இவர் தமிழில் மட்டுமல்லாது மலையாளம் ,தெலுங்கு ஆகிய மொழிகளிலும் பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.ஃபிலிம் பேர் விருதுகள், தமிழ்நாடு மாநில திரைப்பட விழா விருது உள்ளிட்ட பல பாராட்டுக்களையும் பெற்றுள்ளார்
சினிமாவிலும் பிஸியாக இருந்த இவர் கடந்த 2009 ஆம் ஆண்டு வித்தியாசாகர் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.இவர்களுக்கு பெண் குழந்தை ஒன்று உள்ளது சமீபத்தில் இவரது கணவன் நுரையீரல் பிரச்சினையால் திடீரென இறப்புக்குள்ளானார்.இந்த சோகத்தில் இருந்து இவரை தேற்றுவதற்கு அவரது தோழிகள் பலவாறாக முயற்சி செய்து வருகின்றனர்.
#HBDMeena #Meena pic.twitter.com/VDJSO76qlD
அதன்படி தனது 46வது பிறந்த நாளை காணும் மீனாவை மகிழ்ச்சி படுத்துவதற்காக சினேகாவின் சகோதரி சங்கீதா மீனாவிற்கு கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இந்த பிறந்தநாள் வீடியோ சமூக வலைதளத்தில் வலம் வருகிறது. இதை பார்த்த ரசிகர்கள் மீனாவிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இவர் மட்டுமல்லாது கலா மாட்டர் இயக்குநர் ஹரியின் மனைவி பிரீத்தா ஆகியோரும் இவருக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!