• Sep 21 2024

தனது தந்தைக்கு சினேகா கொடுத்த எதிர்பாராத சர்ப்ரைஸ்- வைரலாகும் புகைப்படங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகைகள் இருந்துள்ளனர். அவர்கள் வரிசையில் மிக முக்கியமான நடிகை தான் சினேகா.இவரது நடிப்பிற்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பதோடு புன்னகை அரசி என்றும் மக்களால் அழைக்கப்பட்டு வருகின்றார்.

மேலும் நடிகை சினேகா கடந்த 2012 ம் ஆண்டு நடிகர் பிரசன்னா என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். அத்தோடு இவர்கள் இருவருக்கும் விஹான் என்ற மகனும் ஆத்யந்தா என்னும் பெண் குழந்தையும் உள்ளது.

திருமணத்திற்கு பிறகு நடிப்பை தொடர்ந்த சினேகா, தமிழ், தெலுங்கு உள்ளிட்ட பல மொழிகளிலும் தொடர்ந்து நடித்து வருகிறார்.

இந்நிலையில் இன்று சினேகாவின் தந்தை ராஜாராமுக்கு 70வது பிறந்தநாளுக்கு அவர் எதிர்பாராத விதமாக சர்ப்ரைஸ் தரவேண்டும் என விரும்பிய சினேகா, சென்னை ரெட்ஹில்ஸிலுள்ள ஷெல்ட்டர் ஹோமுக்கு தனது தந்தையை அழைத்து சென்று அங்கிருந்த சிறப்பு குழந்தைகளுடன் சேர்ந்து தந்தையின் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

மேலும் இதை எதிர்பாராத சினேகாவின் தந்தை ராஜாராம் இன்ப அதிர்ச்சிக்கு ஆளானார்.இந்த நிகழ்வின்போது அந்த இல்லத்தில் இருந்த குழந்தைகளின் வாழ்த்துக்களுடன் கேக்கை வெட்டி தனது பிறந்தநாளை கொண்டாடினார் சினேகாவின் தந்தை ராஜாராம்.

அதைத்தொடர்ந்து அங்கிருந்தவர்களுக்கு மத்திய உணவு வழங்கவும் சினேகா ஏற்பாடு செய்திருந்த நிலையில், பிரியாணி… ஸ்வீட் போன்றவை கொடுத்துள்ளார்.

தாத்தாவின் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சினேகாவின் மகன் விஹானும் மகள் ஆத்யந்தாவும் கலந்துகொண்டனர்.

இவர்கள் இருவரும் அங்கிருந்த குழந்தைகளுக்கு தங்களது கைகளால் உணவு பரிமாறியதுடன், அவர்களுக்கு பரிசாக நோட்டு புத்தகங்களும் வழங்கியுள்ளனர். எனினும் தற்போது இதுகுறித்த புகைப்படங்கள் சில சமூக வலைத்தளத்தில் வெளியாகி அனைவரது வாழ்த்துக்களையும் பெற்று வருகிறது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement