• Nov 17 2024

ஒரு படத்திற்க்கு இத்தனை கோடி சம்பளமா... ரசிகர்களின் நாயகி நடிகை பூஜா ஹெட்சின் சொத்து மதிப்பு...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

நடிகை பூஜா ஹெட்ச் இயக்குனர் மிஷ்கின் இயக்கிய முகமூடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் நாயகியாக அறிமுகமானவர். இவரின் சொத்துமதிப்பு விபரம் குறித்து பார்ப்போம்.

நடிகை பூஜா ஹெட்ச் தெலுங்கில் நடிகர் அல்லு அர்ஜுன் உடன் நடித்த "துவடு ஜெகநாதம்" என்ற திரைப்படம் பிளாக் பஸ்டர் ஹிட் அடித்தது. அதன் பின் ரசிகர்கள் வட்டாரம் இவருக்கென உருவானது. பாலிவுட்டில் ரித்திக் ரோஷனுடன் மொகஞ்சதாரோ படத்தில் நடித்து பாலிவுட்டிலும் கலக்க தொடங்கினார்.

நடிகர் விஜய் அவர்களுடனும் சமீபத்தில் பீஸ்ட் திரைப்படத்தில் நடித்திருந்தார். இப்படி எல்லா மொழிகளில் மாற்றி மாற்றி நடித்தாலும் சமீபகாலமாக அவர் நடித்த படங்கள் எதுவும் அவ்வளவாக ஹிட் அடிக்கவில்லை.இந்நிலையில் மாலத்தீவில் தனது 33வது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார்.

கடந்த 2022ம் ஆண்டு ரூ. 50 கோடி சொத்துக்கு சொந்தக்காரராக இருந்த பூஜா ஹேக்டேவின் இந்த வருட மதிப்பு ரூ. 66 கோடி வரை என கூறப்படுகிறது. ஒரு படத்துக்கு சம்பளமாக சுமார் 4 கோடி ரூபாயை பூஜா ஹெக்டே வாங்குகிறாராம். விளம்பரங்களிலும் நடித்துவரும் பூஜா ஹெக்டேவிற்கு ஆந்திரா மற்றும் மும்பையில் வீடுகள்  உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது .

Advertisement

Advertisement