கடந்த 2001 ஆம் ஆண்டு தெலுங்கில் வெளியான 'ஸ்டூடன்ட் நம்பர் 1' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான் ராஜமௌலி. இதனை அடுத்து சில படங்களை இயக்கி இருந்தாலும் 2009ம் ஆண்டு ராம்சனை வைத்து இயக்கிய 'மகதீரா' திரைப்படம் தான் இவருக்கு உலக அளவில் நல்ல வரவேற்பைப் பெற்றுக் கொடுத்தது.
அதேபோல் 2012 ஆம் ஆண்டு வெளியான 'ஈ' படத்தையும் வித்யாசமான கதைகளத்தில் இயக்கி இருந்தார். நானி ஹீரோவாக நடித்திருந்த, இந்த படத்தில் சமந்தா ஹீரோயினாக நடித்திருந்தார். சமந்தாவை அடைய, அவரை துரத்தி துரத்தி காதலிக்கும் நானியை கொடூரமாக கொலை செய்யும் வில்லனை பழி வாங்க ஈ-யாக மறுபிறவி எடுக்கும் நானி, வில்லனை காதலி உதவியுடன் எப்படி பழி வாங்குகிறார் என்பதை ரசிக்கும் படி அனிமேஷன் காட்சிகளுடன் இயக்கி இருந்தார் ராஜமௌலி.
இதைத்தொடர்ந்து பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களை இயக்கி தென்னிந்திய திரையுலகை, பெருமை படுத்திய ராஜமௌலி ஆர் ஆர் ஆர் படத்தின் மூலம், தன்னுடைய திறமையை உலகறிய செய்தார். குறிப்பாக இப்படத்தில் இடம்பெற்ற, நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை பெற்று இந்திய திரையுலகை பெருமைப்படுத்தியது.
அடுத்தடுத்து வெற்றி படங்களை கொடுத்து வரும் ராஜமௌலி, நடிகர் மகேஷ்பாபுவை வைத்து சூப்பர் மேன் கான்செப்ட்டில் ஒரு இயக்க உள்ளதாகவும், இப்படம் ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் மூன்று பாகங்களாக எடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது ஒரு புறம் இருக்க தற்போது செல்போன் நிறுவனத்தின் விளம்பர படத்தில் நடிக்க, 30 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளாராம் .
பொதுவாக விளம்பர படங்களில் நடிக்க ஒரு கோடி ரூபாய் சம்பளம் கொடுத்தாலே அது மிகப்பெரிய விஷயமாக பார்க்கப்படும் நிலையில், ஹீரோக்களையே மிஞ்சும் அளவில் இவருக்கு, இந்த சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு காரணம் இந்த நிறுவனத்தின் விளம்பர தூதராகவும் ஓராண்டுக்கு பணியாற்ற ராஜமௌலிக்கு இந்த சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இது தவிர இந்த செல்போன் நிறுவனத்திற்கு விளம்பர படம் ஒன்றையும் ராஜமௌலி இயக்கி தர வேண்டும் என ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
Listen News!