பிரபல பின்னணி பாடகர் கிருஷ்ணகுமார் குன்னத். எல்லோராலும் கே.கே என்று அழைக்கப்படுகின்றார். டெல்லியை பூர்வீகமாகக் கொண்ட அவர், ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் என இந்தியாவின் பல மொழிப் படங்களில் எண்ணற்ற படல்களைப் பாடி பெயர்போனவர். இவர் நள்ளிரவில் மாரடைப்பு காரணமாக திடீரென மரணமடைந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் 50-க்கும் மேற்பட்ட பாடல்களை பாடிய கே.கே. டெல்லியில் வசித்து வந்த மலையாள குடும்பத்தில் பிறந்தவர். மேலும் இவரின் குரல் பிடித்துப் போனதால் இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான், காதல் தேசம் படத்தில் “கல்லூரிச் சாலை” மற்றும் “ஹலோ டாக்டர்” பாடல்களை பாடும் வாய்ப்பை வழங்கினார்.
இவ்வாறுஇருக்கையில் பல திரையுலகினர்கள் அஞ்சலி செலுத்தினர். கேகே-வை பற்றி பல செய்திகள் வெளிவந்த நிலையில், அவர் மிகச்சிறந்த கார் பிரியர் எனவும் சொல்லப்படுகின்றது.
இதற்கு காரணம் அவர் பயன்பாட்டில் மட்டுமே பல விலையுர்ந்த ஆடம்பர கார்கள் இருந்துள்ளது.
கேகே பயன்படுத்திய கார்களில் விலையுர்ந்த மாடல்களில் ஒன்று தான் ஆடி ஆர் எஸ் 5. இந்த காரை சமீபத்தில் தான் வாங்கியுள்ளார்.
இந்த மாடலில் உயர்நிலை வேரியண்டான ஸ்போர்ட் பேக் என்ற மாடலை வைத்திருந்தார்.
மேலும் இதுமாதிரியான சூப்பரான கார்கள் சிலவற்றரை அவர் வைத்திருந்த காரணத்தினால் தான், கேகே-வை மிக சிறந்த கார்கள் டேஸ்ட் கொண்டவர் என தெரிவிக்கின்றனர்.
ஆடி ஆர்எஸ் 5 காரை டெலிவரி எடுத்த புகைப்படங்களை தற்போதும் இணையத்தில் காண முடியும்.
அத்தோடு இதன் விலை ரூ. 1.07 கோடிகள் ஆகும். இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். ஆடி ஆர்எஸ்5 ஸ்போர்ட்பேக் காரில் 2.9 லிட்டர் பை-டர்போ வி6 டிஎஃப்எஸ்ஐ பெட்ரோல் எஞ்ஜின் பயன்படுத்தப்பட்டிருக்கின்றது.
மேலும், ஆடி ஆர்எஸ்5 சூப்பர் காரை தொடர்ந்து ஜீப் நிறுவனத்தின் கிராண்ட் செரோக்கி மாடலையும் கேகே தன் வசம் வைத்திருந்தார். இந்த காரை தான் தன்னுடைய பெரும்பாலான பயணங்களுக்கு கேகே பயன்படுத்தி வந்துள்ளார். மேலும் இந்த காரின் மதிப்பு மட்டுமே ஒரு கோடி ரூபாய்க்கு அதிகமான ஒன்று.
அடுத்து, ஜீப் கிராண்ட் செரோக்கி சொகுசு கார் மாடலைத் தொடர்ந்து பிரபல சொகுசு கார் உற்பத்தி நிறுவனமான மெர்சிடிஸ் பென்ஸின் ஏ-கிளாஸ் காரையும் கேகே பயன்படுத்தியிருக்கின்றார். எனினும் இதன் மதிப்பு ரூ. 30 லட்சத்திற்கும் அதிகம் ஆகும்.
Listen News!