• Sep 21 2024

ரணகளமாகும் சோசியல் மீடியா.. உண்மையான மாமன்னன் யார் தெரியுமா?குவியும் பாராட்டுக்கள்..!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

 மாமன்னன் படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பே அவர் படம் வெளிவந்த பிறகு மக்கள் இதை விவாதிப்பார்கள் என்று குறிப்பிட்டிருந்தார். அவர் சொன்னது எந்த அளவுக்கு சரி என்பது இப்போது சோசியல் மீடியாவை பார்த்தாலே தெரிகிறது.

ஏனென்றால் நேற்று மாமன்னன் வெளியான பிறகு ஆரம்பித்த விமர்சனங்கள் இப்போது பெரும் விவாதமாக மாறி இருக்கிறது. அந்த வகையில் மாமன்னனாக வாழ்ந்திருக்கும் வடிவேலுக்கு ஒரு பக்கம் பாராட்டுக்கள் குவிந்தாலும் உண்மையான மாமன்னன் யார் என்ற தகவல்கள் இப்போது வைரலாகி வருகிறது.

அந்த வகையில் முன்னாள் சபாநாயகர் தனபால் தான் உண்மையான மாமன்னன் என்ற தகவல்களை நெட்டிசன்கள் இப்போது வெளியிட்டு வருகின்றனர். படத்திற்கு உயிர்நாடியாக இருக்கும் அந்த கதாபாத்திரத்தை இவருடன் ஏன் பொருத்திப் பார்க்க வேண்டும் என்ற சந்தேகம் உங்களுக்கு எழலாம்.

ஆனால் மாமன்னன் கேரக்டர் சித்தரிக்கப்பட்டிருக்கும் விதமும் இவருடைய அரசியல் பாதையும் பல இடங்களில் ஒத்துப் போகிறது. அதாவது ஒடுக்கப்பட்ட சமூகத்தில் பிறந்த இவர் சபாநாயகர் பதவியை அடைவதற்குள் பல சிரமங்களை சந்தித்து தான் வந்திருக்கிறார்.

அவருடைய கட்சியினராலேயே இவர் ஒதுக்கப்பட்ட சம்பவங்களும் நடந்து இருக்கிறது. அதை எல்லாம் தாண்டி சபாநாயகர் பொறுப்பில் இருந்த போதும் இவர் சந்திக்காத சங்கடங்கள் கிடையாது. ஆனால் அதையெல்லாம் ஓரங்கட்டி தன்னுடைய முயற்சியினாலேயே இவர் தனக்கென ஒரு அடையாளத்தை பெற்றிருக்கிறார்.

தற்போது இவருடைய கதையைத்தான் வடிவேலுவின் கதாபாத்திரமாக மாரி செல்வராஜ் சித்தரித்துள்ளதாக படத்தை பார்த்த பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் உண்மையான மாமன்னனையும் வடிவேலுவையும் ஒப்பிட்டும் இப்போது பல கருத்துக்கள் சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.


Advertisement

Advertisement