• Nov 19 2024

இறந்த பின்பு பம்பா பாக்யா பற்றி தெரிய வரும் சில தகவல்கள்-கதறி அழும் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல பாடகரான பம்பா பாக்யா மரணமடைந்துள்ள நிலையில் அவரது பெயர் குறித்த தகவல்  வெளியாகி எல்லோரையும் நெகிழ வைத்துள்ளது.

பரந்த அளவிலான தயாரிப்புகளில் இருந்து தேர்வு செய்து, The Man Company, Wow & பல பிராண்டுகளின் அனைத்து அத்தியாவசிய அழகு மற்றும் ஒப்பனை தயாரிப்புகளையும் சேமித்து வைக்கவும்.

பிரபல பாடகரான பம்பா பாக்யா முதலில் மேடை கச்சேரிகளில் பாடிதான் தனது கெரியரை ஆரம்பித்தார். அவரது வசீகரிக்கும் குரல் வளத்தை கண்ட ஏஆர் ரஹ்மான் தனது இசையில் பாட அவருக்கு வாய்ப்பளித்தார். அதன்படி ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியான ராவணன் படத்தில் இடம்பெற்ற கிடா கிடா கறி அடுப்புல கிடக்கு என்ற பாடல்தான் பாக்யாவின் முதல் பாடல் ஆகும்.

அதனை தொடர்ந்து ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தில் ‘புள்ளினங்காள்’ பாடலை பாடி அசத்தி இருந்தார் பம்பா பாக்யா. அதன் பின்னர் ஏ.ஆர் ரகுமான் இசையில் பிகில் , சர்கார், சர்வம் தாளமயம், இரவின் நிழல் ஆகிய படங்களில் பாடல்களை பாடியுள்ளார்.

49 வயதான பம்பா பாக்யா நேற்று மதியம் திடீர் மாரடைப்பு ஏற்பட்டு அண்ணா நகரிலுள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு இதய துடிப்பு குறைந்து, சிறுநீரக செயல்பாடும் குறைந்து வயிற்றில் அதிக நீர் சேர்ந்திருப்பதாக  கூறினார்கள்.

இதையடுத்து அவரை வேறு மருத்துவமனைக்கு மாற்ற திட்டமிட்டனர். ஆனால் அதற்குள் சிகிச்சை பலனின்றி பம்பா பாக்யா நேற்று இரவு மரணம் அடைந்துள்ளார். அவருக்கு இசையமைப்பாளர் சங்க தலைவர் தீனா, இசை துறையினர் மற்றும் திரைத்துறையினர் பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் பம்பா பாக்யாவின் பெயர் குறித்த தகவல்  ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது பாக்யா என்ற பெயர் கொண்ட இவருக்கு பம்பா பாக்யா என பெயர் வைத்தது ஏ.ஆர்.ரகுமான் தான். பல்பா என்ற ஆப்ரிக்க பாடகரை போலவே பாக்யா பாடியதால் அவருக்கு பம்பா என பெயர் வைத்தாராம்  இசைப்புயல் ஏஆர் ரஹ்மான்.

இதன் பின்னர் அதுவே அவரது அடையாளமாக மாறி பம்பா பாக்யா என மாறிவிட்டார். ஆப்ரிக்க பாடகர் போல் பிரபலமாக வர வேண்டுமென ஏஆர் ரஹ்மானே அப்படி ஒரு பெயரை வைத்துள்ளார். ஆனால் மாரடைப்பால் அகால மரணமடைந்து ரசிகர்களையும் பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்திவிட்டு சென்றுவிட்டார் பம்பா பாக்யா.




Advertisement

Advertisement