• Sep 20 2024

சில உறவுகள் தொலைவில் இருந்தாலும் நெருக்கமாகவே இருக்கின்றோம்- samantha-வின் புதிய லேட்டஸ்ட் கிளிக்ஸ்

stella / 1 year ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் ஹாலிவுட், பாலிவுட் என பல மொழிகளிலும் கலக்கி வரும் நடிகை சமந்தா தமிழ் ரசிகர்களின் ஃபேவரைட் கதாநாயகியாக வலம் வருகிறார்.பல திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து வந்த சமந்தா சமீபத்தில் வெளியான புஷ்பா திரைப்படத்தில் ஒரு பாடலுக்கு டான்ஸ் ஆடி பல இளைஞர்களின் மனதை கவர்ந்திருந்தார். 


இந்த சமயத்தில்தான் அவருடைய காதல் திருமண வாழ்க்கை சில மாதங்களுக்குள் முடிவுக்கு வந்திருக்கிறது. அந்த கஷ்டத்தில் இருந்து வெளியே வராத சமந்தாவிற்கு அடுத்ததாக உடல் நிலையிலும் பாதிப்பு ஏற்பட்டது.ஆனாலும் தைரியமாக அந்த நோயோடு போராடி அதிலிருந்து மீண்டு வந்து கொண்டிருக்கிறார். 


இந்த நோய் பாதிப்பு மட்டும் வராமல் இருந்திருந்தால் அதிகமான திரைப்படங்களில் கமிட் ஆகி சமந்தா நடித்துக்கொண்டிருப்பார். இந்த நிலையில் அவர் சமீபத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவுடன் ஜோடி சேர்ந்து குஷி திரைப்படத்தில் நடித்திருக்கிறார். அந்த திரைப்படத்தில் பிரமோஷனில் கலந்து கொண்ட சமந்தா விஜய தேவரகொண்டாவுடன் டான்ஸ் ஆடி பட்டையை கிளப்பி இருந்தார்.


மேலும் வெளிநாட்டில் ஜாலியாக ஊர் சுற்றி வரும் சமந்தா தற்பொழுது புகைப்படத்துடன் புதிய பதிவு ஒன்றைப் போட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது பூமியில் உள்ள அனைத்து உயிர்களும் தொடர்புடையவை.உங்கள் கை வௌவால் இறக்கையை ஒத்திருக்கிறது. உங்கள் செல்கள் அன்னாசிப்பழத்தின் செல்களைப் போன்ற அதே அமைப்பைக் கொண்டுள்ளன.


 உங்கள் டிஎன்ஏவின் பகுதிகள் காளானின் மரபணுக் குறியீட்டுடன் பொருந்துகின்றன. ஏன்? ஏனென்றால் நீங்கள் பூமியில் உள்ள ஒவ்வொரு உயிரினத்துடனும் முன்னோர்களை பகிர்ந்து கொள்கிறீர்கள். சில உறவுகள் நெருக்கமானவை, சில தொலைவில் உள்ளன. ஆனால் நாம் அனைவரும் ஒரே குடும்ப மரத்தின் அங்கம்."

Advertisement

Advertisement