விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் தான் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் கோபி என்ற கதாபாத்திரத்தின் எதார்த்தமான நடிப்பை மக்களிடையே சிறப்பாக கொடுத்து ரசிகர்களை பெரிதளவில் கவர்ந்து வருகிறார் சதீஷ்.அத்துடன், சமூகவலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சதீஷ், தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் சதீஷிடம் கேட்கிறார், செழியன் பிடிக்குமா எழில் பிடிக்குமா என்று, அதற்கு இரண்டுமே என் பிள்ளைகள் இரண்டு பேரையும் பிடிக்கும் என சொல்கிறார்.
அதைத்தொடர்ந்து இனியா பிடிக்குமா மயூ பிடிக்குமா என்று கேட்க, இரண்டுமே என்னுடைய ரெண்டு கண்கள் என பதில் சொல்லுகிறார். அடுத்து உங்க அம்மாவ பிடிக்குமா மாமியார் பிடிக்குமா என்று கேட்க இரண்டு பேரையுமே பிடிக்கும் என்று பதில் சொல்கிறார்.
இறுதியாக பாக்கியா பிடிக்குமா ராதிகா பிடிக்குமா என்று கேட்க கோபி கேள்வி புரிந்து கொள்ளாமல் இரண்டு பேரையுமே பிடிக்கும் என்று சொல்லி முடிப்பதற்குள் 'ஐயோ இல்ல இல்ல எனக்கு ராதிகாவை மட்டும் தான் பிடிக்கும்' என்று சொல்லுகிறார். இதனை பார்த்த ரசிகர்கள் 'நல்லா மாட்டிக்கிட்டாரு ஒருத்தரு காப்பாத்தணும் கர்த்தரு' என கமெண்ட் செய்து வருகின்றனர்.
Listen News!