தமிழ் சினிமாவின் இளமை துள்ளும் இசையமைப்பாளர் மற்றும் பாடகர் என்ற அந்தஸ்தினைக் கொண்டவர் அனிருத். பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் மனதைக் கொள்ளை கொண்ட இவருக்கு அதிகளவில் பெண் ரசிகர்களே உண்டு. காதலின் வெவ்வேறு நிலைகளை பலவிதமாக எடுத்துக் கூறும் இவரின் பாடல்கள் பல இன்று வரை அனைவரின் ப்லேலிஸ்டிலும் இடம்பிடிக்கிறது.
தொடர்ந்து பல படங்களிற்கு இசையமைத்து வந்த அனிருத்தின் இசையில் இந்த வருடம் வெளியான விஜய்யின் பீஸ்ட், விஜய் சேதுபதியின் காத்துவாக்குல ரெண்டு காதல், சிவகார்த்திகேயனின் டான், கமலின் விக்ரம் என அனைத்து படங்களின் பாடல்களும் சூப்பர் ஹிட் ஆகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இசையமைப்பாளர் அனிருத் திரைப்படங்களுக்கு மட்டுமல்லாமல் பல விளம்பரங்களுக்கும் இசையமைத்து இருக்கின்றார். அந்த வகையில் இவர் பிரபல உணவு டெலிவரி நிறுவனமான சோமேட்டோவுக்காக இசையமைத்திருந்த ‘சும்மா செம்ம சோமேட்டோ’ என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது. குறிப்பாக குழந்தைகளுக்கு இந்த பாடல் மிகவும் பிடித்திருந்ததோடு பெரியோர்களும் இப்பாடலை விரும்பிக் கேட்க ஆரம்பித்து விட்டனர்.
இந்தநிலையில், இப்பாடல் யூடியூபில் வெளியாகி 78 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்றதற்காக அப்பாடலின் இசையமைப்பாளர் அனிருத் சோமேட்டோ நிறுவனத்திடம் ட்ரீட் வைக்குமாறு கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர் சோமேட்டோ நிறுவனத்துடன் டுவிட்டரில் சாட் செய்து அரட்டை அடித்துள்ளார். அதன் ஸ்கிரீன் ஷாட் தற்போது இணையத்தில் படு வைரல் ஆகி வருகிறது.
அந்த உரையாடலின் படி இவர் பேசியது என்னவெனில் “நண்பா சோமேட்டோ ரொம்ப நாள் ஆச்சுல? ‘சும்மா செம்ம' பாடல் 7.8 மில்லியன் வியூஸ்களை பெற்றதற்கு எப்போ ட்ரீட் கொடுக்க போறீங்க” என அனிருத் முதலில் கேட்டார். இதற்கு சோமேட்டோ நிறுவனம் “ லிரிக்ஸ் ப்ரோவுக்கு இல்லாமையா? சொல்லுங்க நான் இப்போ என்ன பண்ணனும்? என அனிருத்திடம் கேட்டது. இதற்கு பதிலளிக்கும் வகையில் "அவசரப்பட்டு ஓகே சொல்லிட்டியே குமாரு" என ரிப்ளை செய்த அனிருத், "எனக்கு ஒரு பீட்சா போதும், ஆனா என்னோட ரசிகர்களுக்கு நான் ட்ரீட் தரணும், அதனால உங்களுக்கு சோமேட்டோவுல ட்ரீட் வேணும்னா, ஏன் உங்களுக்கு நான் இத கொடுக்கணும்னு கமெண்ட் பண்ணுங்க. 100 சுவாரஸ்யமான பதில் அனுப்புபவர்களுக்கு இலவசமா ட்ரீட்.. சோமேட்டோ ஓகே தான?" என பதிவிட்டிருந்தார். இதற்கு பதிலளித்த சோமேட்டோநிறுவனம்"இந்த டுவிஸ்ட நாங்க எதிர்பாக்கல ப்ரோ! இருந்தாலும் ஆரம்பிக்கலாமா?' என தமது பாணியில் பதிவிட்டிருந்தது.
இசையமைப்பாளர் அனிருத், மற்றும் சோமேட்டோ நிறுவனத்திற்கு இடையே இடம்பெற்ற இந்த உரையாடலை பார்த்த ரசிகர்கள் தொடர்ந்து பல்வேறு சுவாரஸ்யமான பதில்களை அவர்களுக்கு அளித்து வருகின்றனர். அதுமட்டுமல்லாது இசையமைப்பாளர் அனிருத்துக்கு தமது வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Listen News!