தமிழ் சினிமாவில் இயக்குநர் சாமி இயக்கத்தில் வெளியான 'மிருகம்' என்ற படத்தில் ஒரு சிறிய ரோலில் நடித்து தனது திரைவாழ்க்கையை தொடங்கியவர் நடிகை சோனா. இதனைத் தொடர்ந்து 'அழைப்பிதழ், அழகர் மலை, பத்து பத்து, லவ்ஸ், சோக்காளி, சோ, குசேலன்' போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக 'குசேலன்' படத்தில் வடிவேலுவின் மனைவியாக நடித்து அசத்தியிருந்தார் சோனா. இருப்பினும் தற்போது வாய்ப்பு இல்லாததால், சின்னத்திரை பக்கம் வந்த சோனா 'மாரி, அபிடெய்லர்' போன்ற சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாது சில்க் ஸ்மிதாவின் வாழ்க்கையை படமாக எடுத்தது போல தனது வாழ்க்கையையும் படமாகவோ அல்லது வெப் சீரிசாகவோ எடுக்க இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் சோனா அளித்துள்ள பேட்டியில் "நான் சினிமாவுக்கு வந்ததே எதர்ச்சியாக நடந்த விஷயம் தான், படங்களில் நடிப்பேன் என்று எனக்குத் தெரியாது. நான் கூச்ச சுபாவம் கொண்டவள் என்பதால், எனக்கு ஆரம்பத்தில் சினிமாவில் நடிப்பதே பிடிக்கவில்லை. ஆனால்,குடும்பம் கொஞ்சம் கஷ்டத்தில் இருந்ததால் நான் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்துவிட்டேன்" எனக் கூறியிருந்தார்.
அத்தோடு "ஆரம்பத்தில் நான் நடித்த படங்களில் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை ரொம்ப நல்ல டீம். அதனால் தான் மென்மேலும் படங்களில் நடிக்க வேண்டும் என்று எனக்கு ஆர்வமே அதிகமானது. ஆனால், அதன் பின் அட்ஜஸ்ட்மெண்ட்னு பேச்சு வந்ததால், கிட்டத்தட்ட 20க்கும் மேற்பட்ட படங்களில் நான் நடிக்க மறுத்துவிட்டேன்" எனத் தெரிவித்திருந்தார்.
மேலும் அவர் கூறுகையில் "முதல் போல் இப்போ வந்து யாராவது அட்ஜஸ்ட்மெண்ட்னு கேட்டா அடிதான். அட்ஜஸ்ட்மெண்ட்டிற்கு கூப்பிடுபவர்கள் வீட்லயும் பெண்கள் இருக்கிறார்கள் அதை மனதில் வைத்துக்கொண்டு நடந்து கொள்ளுங்கள்" எனத் துணிச்சலுடன் தெரிவித்திருக்கின்றார்.
Listen News!