• Sep 20 2024

சோனாலி போகத் கொலை வழக்கு..முன்னாள் அமைச்சருக்கு தொடர்பா? பரபரக்கும் காரணங்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

 கோவாவுக்கு சுற்றுலா சென்ற இடத்தில் பிக் பாஸ் பிரபலமும், பாஜக பெண் பிரமுகருமான சோனாலி போகத் கொலை செய்யப்பட்டதாக கைதான குற்றவாளிகள் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளனர்.

சோனாலி போகத் மரணம் அடைந்த நிலையில் அவர் மரணத்தின் மர்மம் இன்னும் நீடிக்கிறது. அரியானா முன்னாள் அமைச்சருக்கும் சம்பந்தம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கைதான இரண்டு குற்றவாளிகளும் அவர் அருந்திய பானத்தில் விஷத்தை கலந்து கொடுத்ததாக ஒப்புக்கொண்டுள்ளனர்.மேலும்  இவர்களின் பின்புலம் குறித்து போலீஸார் விசாரிக்கின்றனர்.



பிக்பாஸ், டிக்டாக் பிரபலமும் அரியானா மாநில பாஜக பெண் பிரமுகருமான சோனாலி போகத் கோவாவில் படபிடிப்புக்காக வந்த இடத்தில் திடீரென மரணமடைந்தார். மேலும் அவர் மாரடைப்பால் பாதிக்கப்பட்டிருந்தார் என கடந்த திங்கட்கிழமை சோனாலி போகத்தை செயின்ட் அந்தோணி மருத்துவமனைக்கு அவருடன் வந்தவர்கள் அழைத்துச் சென்றுள்ளாரல்கள்.. ஆனால் அவரை சோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக குறிப்பிட்டார். இந்த விவகாரம் பெரிதான நிலையில் சந்தேக மரணமாக பதிவு செய்யப்பட்டு அவரது உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது.

மேலும்  கோவா மருத்துவக் கல்லூரியில் நடைபெற்ற பிரேத பரிசோதனையில் அவர் உடலில் பல காயங்கள் இருந்தது தெரியவந்தது. மேலும் அவரை கொலை செய்துள்ளார்கள் என சோனாலி போகத்தின் சகோதரர், தாயார் குற்றஞ்சாட்டியிருந்தனர், அதற்கு ஏற்றாற்போல் உடலில் காயங்கள் இருந்ததை பார்த்தவுடன் சோனாலி போகத் உடன் கோவாவுக்கு சென்ற சக்வான் மற்றும் வாசியை போலீசார் கைது செய்துள்ளனர்.



அவர்களிடம் விசாரணை நடந்த நிலையில் கடைசியாக பார்ட்டி நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி காட்சியை போலீஸார் சேகரித்துள்ளனர். மேலும் அதில் அவர்கள் சோனாலியை பலவந்தமாக இழுத்துச் செல்லும் காட்சிகள் பதிவாகியிருந்தன. எனினும் இந்நிலையில் அவர் விஷம் கொடுத்து கொல்லப்பட்டிருந்தது பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்தது.

இதையடுத்து பிடிபட்ட இருவரிடமும் போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் அவர்கள் தான் சோனாலியை கொன்றதாக ஒப்புக்கொண்டனர். மேலும் இருவரும் சோனாலிக்கு அவர் அருந்திய பானத்தில் விஷம் கலந்து கொடுத்ததை ஒப்புக்கொண்டதாக போலீஸ் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். இறப்பதற்கு முன் சோனாலி போகத்தை தாக்கியுள்ளனர் என்பதால் சிபிஐ விசாரணை வேண்டுமென அவரது சகோதரர் கேட்டுள்ளார். தனது உணவில் ஏதோ கலக்கப்பட்டதால் தான் வித்தியாசமாக உணர்வதாக தாயாரிடம் பேசியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் இருவரத்து ஒப்புதல் வாக்குமூலம் அவரை கொலை செய்தது உறுதியாகியுள்ள நிலையில் மேலும் திடுக்கிட வைக்கும் தகவலாக அவருடன் கோவாவிற்கு வந்த இருவரில் ஒருவர் அரியானா மாநில முன்னாள் அமைச்சர் ஒருவருக்கு நெருக்கமானவர் ஏதோ சதித்திட்டத்துடன் தான் சோனாலி கோவாவிற்கு அழைத்து வரப்பட்டு கொல்லப்பட்டுள்ளார் என அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். எனினும் இதையடுத்து கோவா மற்றும் அரியானா மாநில போலீஸார் என இரண்டு மாநில போலீஸாரும் விசாரணையில் குதித்துள்ளனர்.

எனினும் தற்போது கொலைக்குற்றத்திற்காக இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் விசாரணை தீவிரமாகும் பட்சத்தில் மேலும் பல மர்மங்கள் விலகலாம் என தெரிகிறது. சோனாலி மரணம் இவர்கள் இருவருடன் முடிய வாய்ப்பில்லை அது அரியானா அரசியலில் மேலும் பல அதிர்வுகளை ஏற்படுத்தும் என தெரிகிறது.மேலும்  மிகப்பெரிய பிரபலம் மரணமடைந்த 2 நாட்களில் கொலையாளிகளை போலீஸார் கைது செய்துள்ளது பாராட்டத்தக்கது.

Advertisement

Advertisement