• Nov 17 2024

கர்ப்பகாலத்தில் மோசமாக போட்டோ ஷுட் நடத்திய சோனம் கபூர்- சமூக வலைத்தளத்தில் கடும் மோதிலில் ஈடுபட்டுள்ள நெட்டிசன்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவூட் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் சோனம் கபூர்.இவர் பிரபல தொழிலதிபரான ஆனந்த் அஹுஜாவை பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்து கொண்டார். 

2018ம் ஆண்டு இவர்களது திருமணம் மும்பையில் கோலாகலமாக நடந்தது. இதற்கு திரையுலகப் பிரபலங்கள் உறவினர்கள் உனப் பலரும் கலந்து கொண்டனர்.


கடந்த சில மாதங்களுக்கு முன் தான் கர்ப்பமாக இருப்பதை அறிவித்த சோனம் கபூருக்கு கடந்த 20ம் திகதி ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதனை அவர் சமூக வலைத்தளத்தில் தெரிவித்த உடனேயே ரசிகர்கள் உட்பட பிரபலங்கள் பலரும் தமது வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர்.

இந்நிலையில் அவர் கர்ப்பமாக இருந்தபோது பிரபல பத்திரிகை ஒன்றுக்காக போஸ் கொடுத்திருக்கிறார். சட்டை அணிந்து பட்டன் போடாமல் வயிற்றில் கையை வைத்தபடி சோனம் கபூர் போஸ் கொடுத்த புகைப்படம் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது.


அதை பார்த்த சமூக வலைதளவாசிகள் சோனம் கபூரை விளாசுகிறார்கள். அவர்கள் கூறியிருப்பதாவது,

இப்படி அரை நிர்வாணமாக போட்டோஷூட் நடத்த வேண்டிய அவசியம் என்ன?. என்ன கருமம் இது. பிரபலங்களுக்கு ஏன் ஆடை என்றாலே பிடிப்பது இல்லை.தாய்மையை இப்படித் தான் அரைகுறை ஆடையில் கொண்டாடுவதா என விளாசியுள்ளனர்.

அதை பார்த்த சோனம் கபூரின் ரசிகர்கள் அவருக்கு ஆதரவாக குரல் கொடுத்துள்ளனர். சோனம் வெறும் சட்டையுடன் போஸ் கொடுத்தாலும் அது ஒன்றும் ஆபாசமாக இல்லை. மேலும் என்ன உடை அணிய வேண்டும், எப்படி போஸ் கொடுக்க வேண்டும் என்பது அவரின் தனிப்பட்ட விஷயம். அதை விமர்சிக்க யாருக்கும் உரிமை இல்லை என தெரிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement