• Sep 20 2024

இளசுகளை கவரும் வகையில் புகைப்படம் வெளியிட்ட சோனியா அகர்வால்- எங்கு டாட்டூ குத்தியுள்ளார் தெரியுமா..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை போன்ற தொடர் வெற்றிப்படங்கள் மூலம் ரசிகர்கள் மனதைக் கொள்ளைகொண்டவர் தான் நடிகை சோனியா அகர்வால்.

இவர் முன்னணி நடிகராக இருந்த போதே பிரபல இயக்குனரும் நடிகர் தனுஷின் சகோதரருமான செல்வராகவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆரம்பத்தில் பெற்றோர் சம்மதத்துடன், அழகாக துவங்கிய இவர்களது காதல் திருமண வாழ்க்கை நீண்ட நாட்கள் நிலைக்க வில்லை. 3 வருடத்தில் கருத்து வேறுபாடு காரணமாக முடிவுக்கு வந்தது.

எனினும் திருமணத்திற்கு பின் படவாய்ப்புகள் எதுவும் வராத நிலையில் சில குணச்சித்திர வேடங்களில் நடித்து வந்தார் சோனியா அகர்வால்.

கடந்த வருடம் சோனியா அகர்வால் நடிப்பில் ரெட் என்ற தெலுங்கு படம் வெளியாகி இருந்தது. இந்த வருடம் கைபக்கா (மலையாளம்), பகீரா, வார்ட் 126, காதலை தேடி நித்யா நந்தா, sshhh, Grandma போன்ற படங்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

மேலும் இப்படி படங்களில் பிஸியாக இருக்கும் சோனியா அகர்வால் இடையில் தனது உடல் எடையை குறைத்து புதிய லுக்கில் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதைப்பார்த்த ரசிகர்கள் குண்டாக இருந்த சோனியா அகர்வாலா இது என ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்.அத்தோடு அந்த புகைப்படத்தில் அவர் குத்தி இருக்கும் டாட்டூ பற்றியும் பேசப்படுகின்றது.அதாவது அவர் தொடைக்கு மேல் டாட்டூ குத்தி உள்ளார்.

Advertisement

Advertisement