• Nov 14 2024

சூர்யாவின் கஜினி திரைப்படத்தில் நடிக்க மறுத்த சோனியா அகர்வால்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் தமது இயல்பான நடிப்பினால் தனக்கென்று ஓர் இடத்தைப் பிடித்த முக்கிய நடிகையாக வலம் வந்தவர் தான் நடிகை சோனியா அகர்வால். இவர் காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தில் இவருக்கு கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து 7 ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். 2006ல் இயக்குநர் செல்வராகவனை திருமணம் செய்த சோனியா அகர்வால் 4 வருடங்களில் அவரை பிரிந்துவிட்டார்.

திருமணத்திற்கு பின் நடிப்பதை நிறுத்திய அவர் மீண்டும் விவாகரத்துக்கு பிறகு நடிக்க தொடங்கி தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது சமீபத்தில் சோனியா அகர்வால் அளித்த பேட்டியில் தான் சூர்யாவின் கஜினி திரைப்படத்தில் நடிக்க கிடைத்த வாய்ப்பை மிஸ் செய்துவிட்டதாக கூறி இருக்கிறார். அந்த படத்தில் அசின் மற்றும் நயன்தாரா ஆகியோர் நடித்து இருந்தனர். ஆனால் எந்த ரோலுக்கான சான்ஸ் தனக்கு வந்தது என சோனியா அகர்வால் கூறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement