• Sep 20 2024

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிக்கும் புதுப்படம் ...வெளியானது டைட்டில் அப்டேட்!

Jo / 1 year ago

Advertisement

Listen News!

பிரபல நடிகர் சிவகார்த்திகேயனின் எஸ்கே புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில், கூழாங்கல் படத்தை இயக்கிய இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜின் அடுத்த பட தலைப்பு வெளியாகியுள்ளது. நடிகர் சூரி மற்றும் மலையாள நடிகை அன்னா பென் நடிக்கும் இந்த படத்துக்கு “கொட்டுக்காளி” என்று பெயரிடப்பட்டுள்ளது. 

தற்போது, இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டருடன் இப்படத்தின் தலைப்பும் மற்றும் படக்குழு குறித்த தகவலையும் படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரில்,  தலைப்பும் சேவல்கள்இடம்பெறும் புகைப்படமும் இடம் பெற்றிருந்தது. கொட்டுக்காலி படத்தை தி லிட்டில் வேவ் பேனரில் கலை அரசும் இணைந்து தயாரிக்கிறார்.

இயக்குநர் பி.எஸ்.வினோத்ராஜின் ‘கூழாங்கல்’ திரைப்படம் ஆஸ்கார் விருதுக்காக இந்தியா சார்பாக அதிகாரப்பூர்வ நுழைந்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படம் 2021-ல் IFFR புலி விருதையும் வென்றது.

இதற்கிடையில், வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் வெளியீட்டிற்காக காத்திருக்கும் சூரியின் இரண்டாவது படத்தைக் கொட்டுக்காளி குறிக்கும். மேலும், நடிகை அன்னா பென் தமிழில் அறிமுகமான முதல் படம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement