தென்னிந்திய சினிமாவில் பெண்களின் கனவு நாயகனாக வலம் வருபவர் நடிகர் விஜய் தேவர்கொண்டா. இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் 'லைகர்'. தெலுங்கில் 'பிசினஸ்மேன், போக்கிரி, ஐ ஸ்மார்ட் ஷங்கர்' என பல்வேறு பிளாக்பஸ்டர் படங்களை இயக்கிய இயக்குநர் பூரி ஜெகன்நாத் தான் இப்படத்தையும் இயக்கி உள்ளார்.
அத்தோடு ஒரே நேரத்தில் தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய இரு மொழிகளில் வெளியான இப்படத்தை நடிகை சார்மி மற்றும் பாலிவுட் பிரபலம் கரண் ஜோகர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மேலும் இப்படத்தில் விஜய் தேவர்கொண்டாவுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை அனன்யா பாண்டே நடித்துள்ளார்.
மேலும் இவர்களுடன் இணைந்து ரம்யா கிருஷ்ணன், மைக் டைசன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பான் இந்தியா படமாக உலகமெங்கும் இப்படம் ரிலீசாகி உள்ளது. இப்படத்தை தமிழகத்தில் நடிகர் ஆர்.கே.சுரேஷின் ஸ்டூடியோ 9 நிறுவனம் வெளியிட்டிருந்தது.
இப்படத்திற்கு வெளியான நாளில் இருந்து இன்றுவரை மோசமான விமர்சனங்களே கிடைத்து வருகின்றது. அதிலும் குறிப்பாக படத்தின் கதை சுவாரஸ்யம் இல்லாமல் இருப்பதாக ஏராளமான விமர்சனங்கள் எழுந்தன. சிலரோ முதல் பாதிவரை கூட தியேட்டரில் உட்கார முடியவில்லை என்றெல்லாம் ட்ரோல் செய்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு விமர்சனங்களை செய்திருந்தனர்.
இந்நிலையில் பெரும் எதிர்பார்ப்பில் வெளிவந்த இப்படம் ஆனது மோசமான வரவேற்பை பெற்று படுதோல்வியை சந்தித்துள்ளது. அதாவது விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் டிசாஸ்டர் படமாக அமைந்துள்ள 'லைகர்' கடந்த மூன்று நாட்களில் சுமார் ரூ. 40 கோடி வரை மட்டுமே வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது.
இந்நிலையில் இப்படத்தின் வசூலை பலரும் சமூக வலைத்தளங்களின் வாயிலாக கேலி செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அதாவது 3 நாட்களிலேயே பல கோடி நஷ்டத்தை சந்தித்துள்ளதாகவும், ஓபனிங்லேயே விஜய் தேவர்கொண்டா சொதப்பி விட்டார் எனவும் கூறி வருகின்றனர்.
Listen News!