• Sep 20 2024

வட இந்திய ரசிகர்களை விட தென்னிந்திய ரசிகர்கள் விசுவாசமானவர்கள் -நடிகை தமன்னா

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை தமன்னா சந்த் சா ரோஷன் செகரா என்ற ஹிந்தி படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார். தொடர்ந்து 2006-இல் வெளியான கேடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்றி கொடுத்தார் நடிகை தமன்னா

தொடர்ந்து முன்னணி நடிகர்களான தல, தளபதி, தனுஷ், ஜெயம் ரவி, கார்த்தி போன்ற நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து திரையுலகில் தனக்கென ஓர் இடத்தை தக்கவைத்தார்.தமிழ், தெலுங்கு, கன்னடம் , ஹிந்தி ஆகிய மொழிகளில் கதாநாயகியாக கலக்கி வருகிறார்.அத்துடன் நடிகை தமன்னா வெப் சீரிஸ் தொடர்களிலும் கவனம் செலுத்தி வருகின்றார்.

இவ்வாறு சினிமாவில் பிசியான நடிகையாக வலம் வரும் தமன்னா வட இந்திய ரசிகர்களை விட தென்னிந்திய ரசிகர்கள் மிகவும் விசுவாசமானவர்கள் என தெரிவித்துள்ளார்.

தென்னிந்திய ரசிகர்கள் திரைக் கலைஞர்கள் மீது உணர்வுப்பூர்வமான பந்தம் ஒன்று கொண்டிருப்பதாகவும் வட இந்தியாவில் அத்தகைய வரவேற்பு ஒரு சில நடிகர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது என தமன்னா கூறியுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement