அரை நூற்றாண்டுக்கு மேலாக சினிமா ரசிகர்களை தன்னுடைய குரலினால் கட்டிப்போட்டு வைத்திருந்த ஒருவரே எஸ்.பி.பாலசுப்ரமணியம். இந்த காந்த குரலில் தான் ரசிகர்கள் காதல் நட்பு சோகம் என அனைத்து விதமான உணர்வுகளையும் உணர்ந்தார்கள்.
ஆந்திராவில் பிறந்து வளர்ந்த இவர் தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம் என இந்தியாவின் அனேக மொழிகளிலும் பாடி ஒட்டுமொத்த தேசத்தின் குரலாக ஒலித்தவர். மேலும் எஸ் பி பாலசுப்ரமணியம் வென்றுள்ள ஆறு தேசிய விருதுகளும் 4 வித்தியாசமான மொழிகளில் இருந்து கிடைத்தது என்பது எஸ்.பி.பியின் பன்மொழி திறனை பறை சாற்றுகின்றது.
இவ்வாறு தமிழ் சினிமா ரசிகர்களின் பேரிழப்பாக பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள் விளங்குகின்றார். அதாவது பின்னணி பாடகராகவும், நடிகராகவும் திகழ்ந்து வந்த இவர் 2020-ஆம் ஆண்டு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி செப்டம்பர் 25-ஆம் தேதி மரணமடைந்தார்.
இவர் எம்.ஜி.ஆர், சிவாஜி தொடங்கி விஜய், அஜித் படங்கள் வரை பல பாடல்கள் பாடியிருக்கிறார். அந்தவகையில் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களின் குரலில் உருவான கடைசி பட பாடல் என்றால் அது ரஜினியின் பேட்ட படத்தில் இடம்பெற்ற மரண மாஸ் பாடலாகும்.
பாடும் நிலா எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்களுக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கிறார். இதில் மகன் எஸ்.பி.சரண் தமிழ் சினிமாவில் நடிகராக, பாடகராக, தயாரிப்பாளராக பன்முகத் திறமை கொண்ட ஒருவராக வலம் வருகிறார்.
ஆனால் பாலசுப்ரமணியத்தின் மகள் இதுவரை எந்த நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டது கிடையாது. அந்தவகையில் தற்போது அவர் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் என்ற நிகழ்ச்சியில் முதன்முறையாக கலந்து கொண்டிருக்கிறார். இதுகுறித்த வீடியோ ஆனது தற்போது படு வைரலாகி வருகின்றது.
Listen News!