• Nov 17 2024

காதலிக்கிறவங்களுக்கு நடிகை நஸ்ரியா கொடுத்த ஸ்பெஷல் அட்வைஸ்ட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் ,தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்து பிரபல்யமான நடிகையாக வலம் வந்தவர் தான் நஸ்ரியா. இவர் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்ததோடு இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உள்ளது.

அவர் பிரபல நடிகரான பகத் பாசிலைத் திருமணம் செய்ததால் சில காலம் சினிமாவை விட்டு விலகியிருந்த இவர் தற்பொழுதும் பல திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.

அந்த வகையில் சினிமாவில் ரி என் ரி கொடுக்கும் விதமாக 'அடடே சுந்தரம்' என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இப்படத்தில் கதாநாயகனாக நானி நடித்துள்ளதோடு தமிழ் ,தெலுங்கு ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

இப்படத்தின் ட்ரெய்லர் கூட அண்மையில் வெளியாகி ரசிகர்களின் ஆதரவைப் பெற்ற நிலையில் இப்படத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் பங்குபற்றினார். அப்போது அவரிடம் காதலிக்கிறவங்களுக்கு நீஙக சொல்லுற அட்வைஸ்ட் என்ன என்று கேட்கப்பட்டது.

அதற்கு நஸ்ரியா வீட்டில உங்க லவ்வுக்கு ஓகே சொல்லல என்றால் அவங்க ஓகே சொல்லும் மட்டும் போராடிட்டே இருங்க அவங்களுக்கு புரியும் மட்டும் புரிய வச்சிட்டே இருங்க என்று அவர் கூறியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement