• Sep 21 2024

நடிகர் ரோபோ ஷங்கர் வீட்டில் நடந்த விஷேசம்- மகளுக்கு வாழ்த்துத் தெரிவிக்கும் ரசிகர்கள்

stella / 1 year ago

Advertisement

Listen News!

சின்னத்திரை நிகழ்ச்சிகளில் மிமிக்ரி கலைஞராக தனது பயணத்தை தொடங்கிய ரோபோ சங்கர், பின்னர் கலக்கபோவது யாரு, அசத்தப் போவது யாரு, அது இது எது போன்ற நிகழ்ச்சிகளில் பல குரலில் பேசி அசத்தியதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார்.


 பின்னர் சினிமாவிலும் இவருக்கு நடிக்க வாய்ப்பு வந்தது. இதையடுத்து சின்னத்திரையில் இருந்து சினிமா பக்கம் சென்ற ரோபோ சங்கர் படங்களில் காமெடி நடிகராக நடித்து வந்தார். தற்பொழுதும் பிஸியாக நடித்து வருகின்றார்.


இப்படியான நிலையில் அண்மையில் இவர் உடல் எடை குறைத்ததன் காரணமாக இவருக்கு என்ன ஆச்சு, ஏதும் நோயின் தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருக்கின்றாரா என ரசிகர்கள் கேட்டிருந்தனர். ஆனால் அவற்றிற்கெல்லாம் பதிலடி கொடுக்கும் விதமாக மீண்டும் ஆரோக்கியமாக இருப்பதோடு ஜிம்மில் கடுமையாக ஒர்க்கவுட் எல்லாம் செய்து வருகின்றார்.


ரோபோ சங்கருக்கு இந்திரஜா சங்கர் என்கிற மகள் இருக்கிறார். இவரும் சினிமாவில் நகைச்சுவை நடிகையாக வலம் வருகிறார். இதுவரை விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தி உடன் விருமன் ஆகிய படங்களில் நடித்து அசத்தினார்.இவர் தன்னுடைய பிறந்த நாளை அண்மையில் கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அது வைரலாகி வருவதைக் காணலாம்



Advertisement

Advertisement