இந்திய சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நடிகை கரீஷ்மா கபூர் ஆவார். இவர் நடிகை கரீனா கபூரின் சகோதரி ஆவார். முன்னணி நட்சத்திரங்களான சகோதரிகள் இருவரும் சிறந்த திரைப்படங்களில் நடித்து இன்று வரை கதாநாயகியாகவே திகழ்கின்றனர்.
அதுமட்டுமல்லாது இவர்கள் ஹிந்தி சினிமாவையே தமது கைக்குள் வைத்திருக்கும் நட்சத்திரங்களாகும். அதுமட்டுமல்லாது இவர்களுக்கென ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். மேலும் அதிக சம்பளம் பெறும் நட்சத்திரங்களாக இவர்கள் திகழுகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் கரிஷ்மா கபூர் அவ்வப்போது சினிமா குறித்த தகவல்களையும், குடும்ப தகவல்களையும் பகிர்ந்து கொள்வார். இந்நிலையில் கணபதி விரதத்தை சிறப்பாக மேற்கொண்ட கரிஷ்மா அது தொடர்பான புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். அதுமட்டுமல்லாது இதனை பார்த்த அவரது ரசிகர்கள் தமது வாழ்த்துக்களை தெரிவித்து வருவதனைக் காணலாம்.
Listen News!