மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் திலீப். இவர் கடந்த 2017ம் ஆண்டு பிரபல நடிகையை காரில் கடத்திச் சென்று பாலியல் தொல்லை கொடுத்து வீடியோ எடுத்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 7 பேரை கைது செய்தனர்
மேலும் இந்த கடத்தலில் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு அவரும் கைதானார். தற்போது திலீப் ஜாமீனில் வந்துள்ளார். இந்த நிலையில் விசாரணை அதிகாரியை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டியதாக இன்னொரு வழக்கும் திலீப் மீது பதிவு செய்யப்பட்டு உள்ளது.
நடிகை கடத்தல் வழக்கு விசாரணை கொச்சியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். திலீப்பும் கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். விசாரணையை ஏப்ரல் 15-ந் தேதிக்குள் முடிக்கும்படி ஏற்கனவே விசாரணை குழுவுக்கு கேரள ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.
ஆனாலும் முடியவில்லை. மேலும் அவகாசம் கேட்டு உச்சநீதிமன்றத்தில் விசாரணை நீதிமன்றம் மனுதாக்கல் செய்தது. இதையடுத்து நடிகை கடத்தல் வழக்கு விசாரணையை அடுத்த வருடம் ஜனவரி 31-ந் தேதிக்குள் முடிக்க அவகாசம் வழங்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!