• Nov 15 2024

ஆன்மீகம் என்பது நாக்கில் வேல் குற்றுவதோ அல்லது ஆணியை குத்துவது அல்ல, நமக்கு மேலே ஒரு சுப்ரீம் பவர் இருக்கு.

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவின் பழம்பெரும் நடிகையில் ஒருவராக விளங்குபவர் நடிகை வடிவுக்கரசி ஆவார். தற்போது இவர் கௌரவ கதாபாத்திரங்களிலும் ,முக்கியமான கதா பாத்திரங்களிலும்  படங்களில் நடித்து வருகின்றார். இந்நிலையில் இவர் பிரபல ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் தனது ஆன்மிகம் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ளார். அந்த நேர்காணலில் அவர் வித்தியாசமான ஆன்மீக பழக்கத்தை கொண்டிருந்ததையும், ஒவ்வொரு கடவுளையும் ஒவ்வொரு கால கட்டங்களில் வணங்கிய அனுபவத்தை பகிர்ந்துள்ளார். இதனை அவர் எல் கே ஜி, பி கே ஜி என வகுத்ததுடன் இவற்றை எல்லாம் கடந்த நிலையை பிரபஞ்சம் என்று குறிப்பிடுகின்றார். 

பாண்டிச்சேரியில் உள்ள பிரபல ஆன்மீகவாதியான அம்மா என்பவரிடம் சென்று தனது தொழில் குறித்த விடயங்களையும் , தனது பேத்தியை பற்றியும் பகிர்ந்து கொள்வார். அதுமட்டுமல்லாது  அனைத்து விடயங்களை விண்ணப்பமாக அவரிடமே சமர்ப்பிக்கும் பழக்கத்தை தான் கொண்டிருந்ததாகவும் என குறிப்பிட்டுள்ளார் .அதுமட்டுமல்லாது பல கடவுள் இருந்தாலும் இந்த பிரபஞ்சத்தையே கடவுளாக கருதி தனது விண்ணப்பங்கள் அனைத்தையும் அங்கு சமர்ப்பிப்பது தான் வழக்கமாகக் கொண்டிருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். அவர் அனைத்து ரசிகர்களுக்கும் அவரவர் விண்ணப்பங்களை பிரபஞ்சத்திடம் ஒப்படைக்கும்படி கூறியுள்ளார் இதையே தான் ஆன்மீகமாக கருதுவதாக அவர் கூறியுள்ளார் .அதுமட்டுமல்லாது அவர் எல்கேஜி இல் இருந்து இன்று வரை இதேயே பின்பற்றுவதாக கூறியுள்ளார் உங்களுக்கு வேண்டிய அனைத்தையும் அந்தப் பிரபஞ்சத்துடன் கேட்க்கும்படியும், அதுமட்டுமல்லாது இந்த பிரபஞ்சத்தை நாம் ஒவ்வொரு கடவுளாகவும் காணலாம் என அவர் கூறியுள்ளார் .

அதுமட்டுமல்லாது ஆன்மீகம் என்பது நாக்கில்வேல்  குற்றுவதோ அல்லது ஆணியை குத்துவது அல்ல  நமது பெற்றோரிடம் வேண்டுகோளை சமர்ப்பிப்பது ஆகும். அந்த பிரபஞ்சத்திடம் நமது வேண்டுகோளை சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ளார் .நமக்கு மேலே ஒரு சுப்ரீம் பவர் இருப்பதாகவும் அதனிடமே நாம் அனைத்து விண்ணப்பத்தை சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ளார் ,இவரது இந்த நேர்காணல் அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.



Advertisement

Advertisement