தமிழ் திரையுலகில் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்களுக்கு நடன இயக்குநராக பணிபுரிந்தவர் தான் பாபா மாஸ்டர்.அதிலும் இவர் நடிகர் தனுஷிற்கு வேலையில்லா பட்டதாரி, மாரி, திருவிளையாடல் ஆரம்பம், படிக்காதவன் , பொல்லாதவன் போன்ற இன்னும் பல படங்களுக்கு நடன இயக்குநராக இருந்திருக்கின்றார்.
இதே போல தொடர்ந்து பிஸியாக இருந்து வரும் இவர் குக்வித்கோமாளி நிகழ்ச்சியிலும் பங்கு கொண்டு பிரபல்யமானார். தற்பொழுது ஷு தமிழில் ஒளிபரப்பாகும் ஜோடி என்னும் ஷோவில் நடிகை சங்கீதாவுடன் இணைந்து நடுவராக இருந்து வருகின்றார்.
இந்த நிலையில் இந்த ஜோடி நிகழ்ச்சியில் பங்குபற்றும் போட்டியாளர்கள் தற்பொழுது இலங்கைக்குச் சென்றுள்ளனர். இலங்கையில் பிரபல்யமான நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு இன்று காலை பாபா மாஸ்டர் சென்றுள்ளார்.இதுகுறித்த புகைப்படங்கள் தற்பொழுது வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் ஜோடி நிகழ்ச்சியில் அடுத்த வாரம் ஒளிபரப்பப்படவுள்ள எப்பிஷோட்டிற்கான ஷுட்டிங் யாழ்ப்பாணத்தில் தான் நடக்கவுள்ளதா என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!