• Sep 20 2024

அழகில் தேவதை போல் ஜொலிக்கும் ஸ்ரீதேவி விஜயகுமார்.... அதுவும் மஞ்சள் புடவையில் மங்களகரமாக... கூடவே அவரது கணவருமா..?

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் ஏராளமான திரைப்படங்களில் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகர் விஜயகுமார். பல படங்களிலும் தனது நடிப்பினை சிறப்பாக வெளிப்படுத்தி வந்த இவர் நடிகை மஞ்சுளாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியினருக்கு 5 மகள்கள் இருக்கின்றனர்.

 


இவர்களது குடும்பம் திரைத்துறையை பின்னணியாக கொண்ட குடும்பம் என்பதால் இவர்களது வாரிசுகளும் திரைத்துறையில் தடம் பதித்தனர். அந்தவகையில் விஜயகுமார் மகனும் பிரபல நடிகருமான அருண் விஜய் தற்போதுவரை பல திரைப்படங்களில் நடித்துக் கொண்டுதான் இருக்கின்றார். அதுமட்டுமல்லாமல் தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்கள் வரிசையில் அவர் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. 



அத்தோடு நடிகை வனிதா விஜயகுமார் குறித்து அனைவருக்குமே தெரியும். இவரும் பல படங்களில் நடித்ததோடு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்குபற்றியிருந்தார். இவர்களை விட அதிக திரைப்படங்களில் நடித்தது நடிகை ஸ்ரீதேவி விஜயகுமார் தான்.



இவர் நடிகர் சத்யராஜ் நடித்த 'ரிக்ஷா மாமா' திரைப்படத்தின் மூலம் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். அதனைத் தொடர்ந்து 'தேவதையை கண்டேன், தித்திக்குதே, பிரியமான தோழி, காதல் வைரஸ்' ஆகிய திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்து இருக்கின்றார். 




இவ்வாறாக படங்களில் பிஸியாக நடித்து வந்த ஸ்ரீதேவி பின்னர் ராகுல் என்பவரை திருமணம் செய்து கொண்டு நடிப்புக்கு முழுக்கு போட்டார். இத்தம்பதியினருக்கு ஒரு மகன் மற்றும் மகள் இருக்கின்றனர்.



ஸ்ரீதேவி தற்போது தனது குடும்பத்தினை கவனித்து வருவது மட்டுமல்லாமல் அவ்வப்போது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது குடும்பம் மற்றும் குழந்தைகளின் புகைப்படங்களை இவர் பகிர்ந்து வருவது வழக்கம்



அந்த வகையில் தற்போது மஞ்சள் நிற புடைவை அணிந்து வீட்டில் தனது கணவனுடன் பூஜை வழிபாடு நடத்தி இருக்கின்றார். இவர் வெளியிட்டுள்ள இப்புகைப்படங்கள் இணையத்தை கலக்கி வருகின்றது. இதை பார்த்த ரசிகர்கள் பலரும் "நீங்க இப்போது கூட ஹீரோயினாக நடிக்கலாம் அப்படியே இருக்கீங்க" என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.



Advertisement

Advertisement