இந்திய திரைப்பட நடிகைகளில் ஒருவர் ஸ்ரீதேவி விஜயகுமார். இவர் குழந்தை நட்சத்திரமாக 1992ல் "ரிக்சா மாமா" திரைப்படத்தில் அறிமுகமானவர்.
அதனைத் தொடர்ந்தது வளர்ந்ததும் 'தேவதையை கண்டேன், ரிக்ஷா மாமா, தித்திக்குதே' ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல தென்னிந்திய மொழிப் படங்களிலும் நடித்துள்ளார்.
அதுமட்டுமல்லாது இவர் விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா விஜயகுமார் ஆகியோரின் மகள் என்பது நம் அனைவருக்கும் தெரியும். இவருக்கு வனிதா, பரீத்தா விஜயகுமார் என்ற சகோதரிகளும் அருண் விஜய் என்ற சகோதரனும் உள்ளனர்.
தன்னுடைய அழகால் பல ரசிகர்களின் மனதைக் கவர்ந்த இவர் 18 ஜூன் 2009-இல் ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார். தற்போது இவர்களுக்கு ஒரு மகள் இருக்கின்றார்.
இந்நிலையில் ஸ்ரீதேவி தனது மக்களுடன் நத்தார் பண்டிகைக்காக கிறிஸ்மஸ் மரம் ஒன்றினை ரெடி செய்யும் வீடியோ ஒன்றினை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கின்றார்.
அந்த வீடியோ ஆனது தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன. அதனைப் பார்த்த ரசிகர்கள் "ஸ்ரீதேவியின் மகள்" நன்றாக வளர்ந்து விட்டார், அச்சு அசலாக ஸ்ரீதேவியின் அம்மாவைப் போலவே அவரின் மகளும் இருக்கின்றார்" எனக் கூறி வருகின்றனர்.
Listen News!