• Sep 20 2024

இரவு பார்ட்டியில் மாஜி காதலருடன் ஸ்ரீதேவி மகள் -நடந்தது இது தான்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

திரையுலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் தான் ஜான்வி கபூர்.

இவரும் நடிகர் ஷாஹித் கபூரின் தம்பி இஷான் கட்டாரும் காதலித்தார்கள். ஜான்வியின் முதல் படமான தடக்கின் கதாநாயகன் தான் இஷான்.

ஜான்வி, இஷானின் காதலுக்கு போனி கபூர் பச்சைக்கொடி காட்டினார். ஆனால் ஜான்விக்கும், இஷானுக்கும் இடையே சில பிரச்சனை ஏற்பட்டு பிரிந்துவிட்டார்கள்.

இந்நிலையில் பிரபல பாலிவுட் இயக்குநரான கரண் ஜோஹரின் பிறந்தநாள் பார்ட்டிக்கு வந்த ஜான்வி அங்கு இஷானை பார்த்ததும் முகத்தை திருப்பிக் கொண்டு செல்லாமல் சிரித்து சகஜமாக பேசியிருக்கிறார்.

அத்தோடு இஷானுடன் சேர்ந்து புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்திருக்கிறார்.

ஜான்வியை பிரிந்த பின்னர் நடிகை அனன்யா பாண்டேவை காதலித்தார் இஷான். அந்த காதல் அண்மையில் தான் முறிந்தது.

மேலும் கெரியரை பொறுத்தவரை இருவருமே அவரவர் படங்களில் பிசியாக இருக்கிறார்கள். ஜான்வியால் இன்னும் பெரிய பிரேக் கொடுக்க முடியவில்லை. அத்தோடு அவர் எது செய்தாலும் அம்மா ஸ்ரீதேவியுடன் ஒப்பிட்டு விமர்சிக்கப்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement