• Sep 20 2024

'நேற்று ராத்திரி யம்மா' பாடலிற்கு... 'எதிர்நீச்சல்' குணசேகரன் பண்ணிய அலப்பறை... சூப்பரான Start music promo..!

Prema / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் பல ரியாலிட்ரி ஷோக்கள் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகின்றன. அதுமட்டுமல்லாது இதில் ஒளிபரப்பாகும் ரியாலிட்ரி ஷோக்களுக்கென்று தனி ரசிகர் பட்டாளமும் உண்டு. அவ்வாறான நிகழ்ச்சிகளில் ஒன்றுதான் 'ஸ்டார்ட் மியூசிக்'.


இந்நிகழ்ச்சியானது 3சீசன்களை வெற்றிகரமாக கடந்து விட்ட நிலையில் தற்போது இதன் நான்காவது சீசன் ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த நிகழ்ச்சியினை தொகுப்பாளினி பிரியங்கா தான் தொகுத்து வழங்கி வருகின்றார்.


இந்நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற ஒரு சுவாரஷ்ய சம்பவம் குறித்த ப்ரோமோ வீடியோ ஒன்று வெளியாகி வைரலாகி வருகின்றது. அதாவது இந்த நிகழ்வில் இந்த வாரம் 'எதிர்நீச்சல்' சீரியலில் குணசேகரன் கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகர் மாரிமுத்துவும் கலந்து கொண்டுள்ளார். 

அந்த சமயத்தில் "நேற்று ராத்திரி தூக்கம் போய்ச்சுதா" பாடல் ஒலிக்க விடப்படுகின்றது. அப்போது இருவர் நின்று பர்போமன்ஸ் பண்ணி பாடலைக் கண்டு பிடிக்க உதவுகின்றனர். ஆனால் இறுதிவரைக்கும் மாரிமுத்து அது என்ன பாடல் என்பதைக் கண்டுபிடிக்கவேயில்லை. 


பின்னர் வெளியில் வந்த மாரிமுத்து "நேற்று ராத்திரி பாடல் தானே, நீங்க ரெண்டு பேரும் கட்டிப் பிடித்து ஆடி இருந்தால் கூட கண்டு பிடித்திருப்பேன்" எனக் கூறுகின்றார். பின்னர் கரகாட்டக்காரன் பாடல் ஒன்று ஒலிக்கவிடப்படுகின்றது. அதற்கு மாரிமுத்து ரியாக்ஷன் கொடுக்கின்றார். ஆனால் அந்த நபரும் குறித்த நபரும் அந்தப் பாடலை கண்டுபிடிக்கவில்லை. 

இதனையடுத்து மாரிமுத்து நான் வாழ்க்கையில் இவ்ளோ தரம் டான்ஸ் ஆடினதே இல்லை எனக் கூறிப் புலம்புகின்றார். இதோ அந்த சூப்பரான ப்ரோமோ வீடியோ..!  


Advertisement

Advertisement