தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரங்களில் ஒருவராக திகழ்பவர் தான் நடிகர் விஜய்.இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு ஓடவில்லை.
இப்படத்தை தொடர்ந்து தற்போது வம்சி இயக்கத்தில் வாரிசு திரைப்படத்தில் நடித்து வருகின்றார். எதிர்பார்ப்பை எகிற வைத்து வரும் வாரிசு திரைப்படம் வருகிற 2023ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியாகின்றது.
இதற்கிடையே வாரிசு திரைப்படத்தை தொடர்ந்து விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி 67 திரைப்படத்தில் நடிப்பார் என கூறப்படுகிறது. ஆனால் இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் செல்லும் இடம் எல்லாம், தளபதி 67 குறித்து தான் கேட்கப்பட்டு வருகின்றது.அத்தோடு அவரும் தயாரிப்பு நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்தால் தான் இது குறித்து பேச முடியும் என கூறியிருந்தார்.
இந்நிலையில் தற்போது ரசிகர்கள் அனைவரையும் குஷிபடுத்தும் வகையில் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. ஆம், லோகேஷ் கனகராஜ் தளபதி 67 திரைப்படத்திற்காக தற்போது லோக்கேஷன் தேடுதலில் உள்ளார்.
அதன்படி தற்போது மும்பை விரார்-ல் இயக்குநர் லோகேஷ் தேடுதல் பணியை தொடங்கியிருக்கிறார். அத்தோடு அங்கு எடுக்கப்பட்ட அவரின் புகைப்படம் ஒன்று வெளியாகி இருக்கிறது. இதோ அந்த புகைப்படத்தை நீங்களே பாருங்கள்
பிற செய்திகள்
- நடிகை ஹன்சிகாவிற்கு விரைவில் திருமணம்-யார் மாப்பிள்ளை தெரியுமா..?
- தனுஷ் ரசிகர்களுக்கு வெளியான சூப்பர் செய்தி… அடுத்தடுத்து மூன்று படம்?
- ஷங்கரின் மகள் அதிதியை தாக்கி பேசிய நடிகை ஆத்மிகா- பொங்கி எழும் ரசிகர்கள்..வைரலாகும் ட்வீட்..!
- வசூல் வேட்டையில் தி லெஜண்ட் திரைப்படம்-உலகம் முழுவதும் இத்தனை கோடியா..?
- ஐஸ்வர்யாவை யாரும் ஏமாற்றவே முடியாது: மனைவி பற்றி தனுஷ் கூறிய விசயம்..!
சமூக ஊடகங்களில்:
- Facebook : சினிசமூகம் முகநூல்
- Twitter: சினிசமூகம் ட்விட்டர்
- Instagram : சினிசமூகம் இன்ஸ்டாகிராம்
- YouTube : சினிசமூகம் யு டியூப்
Listen News!