• Nov 19 2024

குறை சொல்றதை விட்டிட்டு இறங்கி வேலை செய்யுங்க- கருத்து தெரிவித்த கமல்ஹாசன்- திட்டித் தீர்க்கும் நெட்டிசன்கள்

stella / 11 months ago

Advertisement

Listen News!

சென்னையில் மிக்ஜாம் புயலின் கோரதாண்டவத்தால் பெருமழை கொட்டித்தீர்த்தது. இந்த மழையால் சென்னையே வெள்ளக்காடாக மாறியது. வெள்ளத்தில் சிக்கி ஏராளமானோர் உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்கள் இன்றி தத்தளித்து வருகின்றனர். 

வெள்ளம் வந்த 5 நாட்கள் ஆகியும் நீர் வடியாததால் பெரும்பாலான பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு தேவையான நிவாரண பொருட்களை அரசு மட்டுமின்றி தன்னார்வலர்களும் சினிமா பிரபலங்களும் வழங்கி வருகின்றனர். 


குறிப்பாக இயக்குனர் பார்த்திபன், விஜய் டிவி பிரபலங்களான பாலா மற்றும் அறந்தாங்கி நிஷா, நடன இயக்குனர் கலா மாஸ்டர் என ஏராளமானோர் களத்தில் இறங்கி மக்களுக்கு தேவையான உணவு, பால் போன்ற பொருட்களை வழங்கி வருகின்றனர்.

இந்த நிலையில் இது குறித்து கமல்ஹாசன் தற்பொழுது முக்கிய பதிவொன்றைப் போட்டுள்ளார். அதில் இதற்கு முன்பு வந்ததெல்லாம் சிற்றிடர். இப்போது வந்திருப்பது பேரிடர் என்பதில் எந்த வித சந்தேகமும் இல்லை.குறை சொல்லிக் கொண்டிருப்பதை விட இறங்கி வேலை செய்ய வேண்டியது நமது கடமை. மக்களுக்கு உதவுவது தான் இப்போது முக்கியம்.காலநிலை மாற்றம் என்பது உலகம் முழுவதும் நிகழும் ஒன்று என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement