• Nov 10 2024

இந்த வசூல் சண்டையை நிறுத்துங்க..இங்க அதெல்லாம் வேண்டாம்-விஷ்ணு விஷால் காட்டம்!

stella / 1 year ago

Advertisement

Listen News!


நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் இருவரின் படங்களான வாரிசு மற்றும் துணிவு ஆகிய திரைப்படங்கள் கடந்த 11ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன.இந்தப் படங்கள் வெளியாகி தற்போது ஒரு வாரத்தை கடந்த நிலையில், இரு படங்களில் எந்தப் படம் பாக்ஸ் ஆபிஸ் கலெக்ஷனில் முந்தியது என பட்டிமன்றம் வைக்காத குறையாக சண்டை நடைபெற்று வருகிறது.

சமூக வலைதளங்களில் நடைபெற்றுவரும் இந்த களேபரங்களால் தினந்தோறும் இந்தப் படங்களின் வசூல் நிலவரம் குறித்து அனைவரும் உன்னிப்பாக கவனித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே இவர்களின் படங்கள் குறித்த டாக்கே கோலிவுட்டில் அதிகமாக இருந்தது. இரு படங்களில் எந்தப் படம் ரசிகர்களை கவரும் எந்தப் படம் வசூலில் முந்தும் என அடுத்தடுத்த சர்ச்சைகளை ரசிகர்கள் கிளப்பி வந்தனர்.


சமூக வலைதளங்களில் இதுகுறித்த வார்த்தைப்போர் அதிகமாக காணப்பட்டது. அவர்களே சும்மா இருந்தாலும் விமர்சகர்கள் இந்தப் படங்களை விடாமல் பிடித்துக் கொண்டு அதை ட்ரெண்ட் ஆக்கினர். இந்நிலையில் இரண்டு படங்களும் ஒரே நேரத்தில் சமமான திரையரங்குகளில் ரிலீசாகி இரண்டு படங்களும் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறது.


இரண்டு வெவ்வேறு ஜானர்களில் படங்கள் வெளியான நிலையிலும், இரண்டு படங்களும் குறைந்தபட்ச வித்தியாசத்தில் வசூல் வேட்டை நடத்தி வருகின்றன. இந்நிலையில், வாரிசு படம் கடந்த 7 நாட்களில் மட்டுமே 210 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதாக தயாரிப்பு தரப்பு அப்டேட் தெரிவித்துள்ளது. இதன் நம்பகத்தன்மை குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.


இதனிடையே துணிவு படமும் சர்வதேச அளவில் 200 கோடி ரூபாய் வசூலை எட்டியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு சமூக வலைதளங்களே தீப்பிடிக்கும் வகையில் இந்த விவாதங்கள் அதிகமாக நடந்து வருகின்றன. இந்நிலையில் நடிகர் விஷ்ணு விஷால் இதுகுறித்த தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார்.படங்களை படமாக பாருங்கள் என்றும், உங்களுடைய ஹீரோக்களை கொண்டாடுங்கள் என்றும் தெரிவித்துள்ள விஷ்ணு விஷால், தேவையில்லாமல் சோஷியல் மீடியாவில் சண்டை போட வேண்டாம் என்றும் இதை உடனடியாக நிறுத்துங்கள் என்றும் கோபமாக டுவிட் செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement